15 Dec 2019

தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தியதற்கும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்குமுரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும் - அரியநேத்திரன்.

SHARE

தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தியதற்கும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்குமுரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும் - அரியநேத்திரன்.
தந்தை செல்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வருகின்ற 18 ஆம் திகதி 70 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. எனவே தந்தை செல்வாவின் காலத்தில் இனப்பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வுகண்டிருந்தால் அனியாயமாக தமிழ் இளைஞர்கள் அயுதமேந்தி இறந்திருக்கமாட்டார்கள், முள்ளிவாய்க்கால் வரைக்கும் தமிழ் மக்கள் இறந்திரக்கமாட்டார்கள். இவை அனைத்திற்கும் முழுப் பொறுப்பும் இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும். எனவே இன்றுவரை தமிழ் மக்கள் ஒரு ஏமாற்றப்பட்ட இனமாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றோம்.


என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலம் சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் 13 வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலம் சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் அவர்கள் ஆரம்ப காலத்தில் வீரகேசரிப் பத்திரிகையில் ஒப்பு  நொக்குபவராக பணிபுரிந்துள்ளார்.

வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரிந்ததன் பின்னர் அவர் பிரித்தானியாவின் தூதரகத்திலே பணியாற்றினார். பின்னர் அவர் பிரித்தானியாவிற்கே சென்று அவுஸ்ரோலியாவைச் சேர்ந்த அடேல் அவர்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பின்னர் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கெரிலாபோர் யுக்தி எனும் ஒரு புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார். 1986 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்திலே அந்த நூலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாசித்துள்ளார். அப்புத்தகம் தலைவர் பிரபாகரனை ஈர்திருந்தது. அதனூடாகத்தான் தலைவர் பிரபாகரன் அன்ரப் பாலசிங்கத்தை தொடர்பு கொண்டார். பின்னர் அவர் அவ்வியக்கத்திலும் இணைந்து கொண்டார். பின்னர் அவர் இந்தியாவிலே இருந்து கொண்டு தழிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு பல பயிற்றிகளை வழங்கி வந்தார். பின்னர் வீரம் செறிந்த இயக்கத்திங்கு விவேகத்தைக் கொடுக்கும் ஒரு அசானாக அன்ரன் பாலசிங்கம் அவர் இறக்கும்வரையில் செயற்பட்டு வந்தார்.

தேசத்தின்குரல் அன்ரப் பாலசிங்கத்தினால் 1986 காலப்பகுதியிலே வடக்கு கிழக்கு தொடர்பில் எழுதப்பட்ட ஆக்கபூர்வமான விடையங்களோடு, அவர் திம்பு பேச்சுவார்தையிலும் கலந்து கொண்டார். பின்னர் இலங்கை அரசுடனான பேச்சுவார்தைகள், சர்வதேசத்தினுடனான பேச்சுவார்தைகள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் சர்வதேச செயற்பாட்டாளர், என பலவற்றிலும் அவர் பங்கேற்று வந்துள்ளார். இவரின் செயற்பாட்டை உலகத்தலைவர்க்ள ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது.

அன்ரப் பாலசிங்கம் இனைந்த வடக்கு கிழக்கின் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்ட்டி அடிப்படையிலான தீர்வும் பெறவேண்டும் என பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தார். 2009 மே 18 இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனத்திற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கின்ற செயற்பாட்டை ஏற்கனவே சர்வதேசத்தினூடாக மேற்கொண்டு வந்தவ புத்திஜீவிதான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். இவரை நினைவு கூரவேண்டியதன் தேவை உலகத் தமிழர்களுக்கு உள்ளது.

தந்தை செல்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வருகின்ற 18 ஆம் திகதி 70 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. எனவே தந்தை செல்வாவின் காலத்தில் இப்பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வுகண்டிருந்தால் அனியாயமாக தமிழ் இளைஞர்கள் அயுதமேந்தி இறந்திருக்கமாட்டார்கள், முள்ளிவாய்க்கால் வரைக்கும் தமிழ் மக்கள் இறந்திருக்கமாட்டார்கள். இவை அனைத்திற்கும் முழுப் பொறுப்பும் இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும். எனவே இன்றுவரை தமிழ் மக்கள் ஒரு ஏமாற்றப்பட்ட இனமாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தற்போது இலங்கையில் பதிய ஜனாதிபதி வந்துள்ளார் மூன்று இன மக்களையும் ஒரே பார்வையில்தான் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, மெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறுபட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. எனவே சர்வதேச ரீதியாக தமிழ் மக்களின் பிரச்சனை சென்று கொண்டிருப்பதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம், மாவீரர்களின் தியாகங்கள், தொடற்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னெடுப்புகள்தான் காரணமாகும். இவையனைத்திற்கும் அடித்தளமிட்டவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்தான்.
யார் ஜனாதிபதியாக வந்தாலும், சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற அரசில் உரிமையை தமிழ் மக்களுக்கும் தரவேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும். இதைத்தான் தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தலிகளிலும் பிரதிபலித்துச் சொல்கின்றார்கள். எந்தவொரு சிங்களத் தலைவர்களைப்பற்றியும், தமிழ் மக்களுக்கு குரோதங்கள் இல்லை, மாறாக 70 வருடங்களாக இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கைகதான் தொடர்கின்றன. இதனை தற்கால இளைஞர்கள் நன்கு அறிந்து செயற்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: