21 Dec 2019

மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பு

SHARE
விதையனைத்தும் விருட்சமே எனும் கருப்பொருளின் கீழ் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும், கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் இணைந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.  
இச் செயற்றிட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கரடியனாறு பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியினையும், கற்றலின் மீதான ஆர்வத்தினைத் தூண்டும் வகையிலும் கற்றல் உபகரணங்களை வழங்கும் செயற்றித்தினை இன்று (19.12.2019) யாழ் இளைஞர் அமைப்பினர் முன்னெடுத்தனர். 

இதன்படி மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கரடியனாறு, குசலானமலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வானது சிறகுகள் அமைப்பின் நிர்வாகப் பிரிவுத் தலைவர் பிரியதர்சன் தலைமையில்  குசலானமலை பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. 

சிறகுகள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கரிகரராஜ், நமக்காக நாம் அமைப்பின் தலைவர் தீபாகரன் மற்றும் விதையனைத்தும் விருட்சம் செயற்றிட்டத்தின் தொண்டர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர். 









SHARE

Author: verified_user

0 Comments: