1 Dec 2019

கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை ஆசீர்வதிக்கும் நிகழ்வு.

SHARE
கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை ஆசீர்வதிக்கும் நிகழ்வு.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆசிவேண்டி சனிக்கிழமை (30) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
ஆலயத்தில் பூசை ஆராதனைகள் நடைபெற்றதனைத் தொடர்ந்து, குறித்த பரீட்சையில் அனைத்து மாணவர்களும் சித்தியடைவேண்டும் என்ற ஆசியுரையினையும் ஆலயப்பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் வழங்கினார். தொடர்ந்து பரீட்சையிக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எழுதுகருவி, பிரசாதம் போன்றன சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள் ஆகியோரால் வழங்கப்பட்டமையுடன், மாணவர்களும் ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர்சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர் அ.தயாசீலன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வண்ணக்ர் செயலாளர் இ.சாந்தலிங்கம், ஓய்வுபெற்ற ஆசிரியர் க.யதுகுலராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

தேசிய பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களுக்கு இறையாசி வேண்டி இந்நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: