31 Dec 2019

70 வருடங்களாக அரசியல் செய்கின்ற தமிழ் தேசியம் பேசுகின்ற தலைமைகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். ரி.எம்.வி.பி பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன்.

SHARE
70 வருடங்களாக அரசியல் செய்கின்ற தமிழ் தேசியம் பேசுகின்ற தலைமைகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். ரி.எம்.வி.பி பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன்.
கல்வியினை வளர்ப்பதாகவும் சமூகத்தின் தமிழர்களுக்கான பிரச்சினையை தீர்த்து கொடுப்பதாகவும் கூறிக்கொண்டு 70 வருடங்களாக அரசியல் செய்கின்ற தமிழ் தேசியம் பேசுகின்ற தலைமைகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். 

என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச மகளிர் அணியின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனைப்பற்று பிரதேசத்தின் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு மற்றும் புதுக்குடியிருப்பு ராஜதுரை கிராமம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கான திங்கட்கிழமை மாலை (30) பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனைப்பற்று பிரதேச அமைப்பாளர் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் ஆலய நிர்வாகிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், ஆற்றல் பேரவை செயலாளர் ஸ்கந்த முதலி மற்றும் பிரதேச மகளிரணி தலைவிகள், செயலாளர்கள், பிரதேசவாசிகள், உள்ளிட்ட பலரும் கொண்டிருந்தனர்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரசாந்தன்….அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கல்வியை சீர் குலைப்பதற்காக அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வந்தது கடந்த காலத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றத்திலும் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்விலும் தங்களது அரசியல் அழுத்தங்களை பாவித்து திறமையாகச் செயற்பட்ட பலர் பிரதேச வலயக்கல்விப் பணிப்பாளர்களை மாற்றுவதற்கான அழுத்தங்களைக் கொடுத்து இருக்கிறார்கள். இது உண்மையில் கிழக்கு மாகாணத்தின் கல்வியினை அடியோடு அளிக்கின்ற செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம். அதே போன்று கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பிற்பாடு படித்துவிட்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் சித்தி அடையாமல் வேலை வாய்ப்புகள் இல்லாமல் சென்ற இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுமார் ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்கப்பட இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக பிரதேச ரீதியாக 350  இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிக விரைவில் இந்த வேலை வாய்ப்புகள் எல்லாம் வழங்கப்படும் இதனால் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பொருளாதார நிலையை படிப்படியாக சீர்படுத்திக் கொண்டு தமிழர்கள் இருக்கின்ற கல்வி என்கின்ற ஆயுதத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக அமையும் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரும் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் வறுமையை போக்கி கல்வியில் சிறந்து ஒரு சமுதாயமாக கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாணசபை ஆட்சி காலத்தில் இருந்தது. அதே போன்று மீண்டும் வளமான எதிர்காலத்தையும் கல்விகற்ற புத்திஜீவியான பகுப்பாய்வு செய்து அரசியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் வலுவான ஒரு சமுதாயத்தை கொண்டு வருவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்ந்தும் மக்களோடு பயணிக்கும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: