16 Nov 2019

அமைதியான முறையில் மட்டக்களப்பில் தேர்தல் நடைபெறுகின்றது.

SHARE
அமைதியான முறையில் மட்டக்களப்பில் தேர்தல் நடைபெறுகின்றது.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் சர்வசன வாக்கெடுப்பு திட்டமிட்டபடி இன்று சனிக்கிழமை காலை  7 மணி முதல் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 94,645 வாக்காளர்களும்,  மட்டக்களப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 187,682 வாக்காளர்களும், கல்குடா தேர்தல் தொகுதியிலிருந்து 115,974, வாக்கதளர்களும் மாவட்டத்தில் அமைந்துள்ள 428 வாக்கெடுப்பு நிலையங்களில், மொத்தமாக 398301 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். வயோதிபர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களும் அடங்கலாக அனைவரும் வாக்களிப்பதற்கு ஏதுவான சகல ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகஸ்;கள் கடையில் ஈடுபட்டுள்ளனர் அதில் 1800 உத்தியோகஸ்த்தர்கள் வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 காவல்துறை உத்தியோகத்தர்களும், 320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைப்பட்டுள்;ளனர். ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் கணக்கெடுப்பு நிலையங்களுக்காக இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர போக்குவரத்துப்பணியில் விசேட காவல்துறைப் பிரிவினர் பங்கெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் தேர்தல் மத்திய நிலையமாகக் காணப்படும் இந்துக்கல்லூரியில் வாக்கெண்ணும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27 நிலையங்கள் சாதாரண வாக்கெண்டும் நிலையங்களாகவும், 7 நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

இந்நிலையில் தேர்தல் பணியினை கண்காணிப்பதற்காக சர்வதேச உள்நாட்டு, கண்காணிப்பாளரின் தங்களது கண்காணிப்பு பணியினை ஆரம்பித்துள்ளனர். இதுவரையில் 53 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 35 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 18 முறைப்பாடுகளுக்குரிய தீர்வு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆறு முறைப்பாடுகள் வன்முறைகளாகவும், 47 முறைப்பாடுகள் தேர்தல் விதி மீறுதல்களாகவும் பதிவாகியுள்ளதாகவும்,  மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: