30 Nov 2019

உலகப் போக்கிலிருந்து நாம் 70 வருடங்கள் அறிவு ரீதியாகப் பின்தங்கியிருக்கின்றோம் - பொதுமக்கள் தொடர்பு அதிகாரி

SHARE

உலகப் போக்கிலிருந்து நாம் 70 வருடங்கள் அறிவு ரீதியாகப் பின்தங்கியிருக்கின்றோம் - பொதுமக்கள் தொடர்பு அதிகாரி.இலங்கையர்களாகிய நாம் உலகப் போக்கிலிருந்து சுமார்  70 வருடங்கள் அறிவு ரீதியாகப் பின்தங்கியிருக்கின்றோம் என பொதுமக்கள் தொடர்பு அதிகாரி பீ.எம்.எம். பிறோஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் செயற்பாடுகள் பற்றிய அமர்வு வியாழக்கிழமை 28.11.2019 மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டாளர்கள்  கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய காத்தான்குடிப் பிரதேச செயலகத்தின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி மேலும் கூறுகையில், நடுநிலையாக நாம் எதனையும் பகுத்தாராயத் தவறியதன் விளைவுகளை பொருளாதாரம், கல்வி, அரசியல், சுகாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் இழந்து வருகின்றோம்

இந்தப் போக்கு உலக அபிவிருத்தி ஒழுங்கமைப்பிலிருந்து எங்களை சுமார் ஏழு தசாப்தங்களுக்கு பின்தள்ளி வைத்திருக்கின்றோம்.

இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு சமூகமும் தாங்கள் சிந்திப்பது, சொல்வது, செயற்படுவது மட்டும்தான் சரியென நியாயப்படுத்திக் கொண்டு இருப்பதனால் இலங்கைச் சமூகங்கள் பிளவுகளையும் அழிவுகளையும் தொடர்ச்சியாக சந்தித்து தொடர்ச்சியாக பின்னடைவுகளை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றோம்.

எனவே, இலங்கையர்கள் அனைவருக்கும் இன மத, அரசயல் பேதங்களைக் கடந்த அறிவு ரீதியான புரட்சி தேவைப்படுகின்றது.

அறிவு ரீயாகச் சிந்தித்தால் மூவாயிரம் கோடி (3000) ரூபாவைச் செலவு செய்து நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியமில்லை. இது மக்களின் பணம்.

இது அறிவு ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத நடைமுறை, சில அறிவு ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகள் இத்தகைய நடைமுறையைப் பின்பற்றுவதில்லை.

நாம் கோடானு கோடி செலவு செய்து நாட்டின் அதிபரையோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களையோ தெரிவு செய்கின்ற அதேவேளை நாட்டு மக்களில் பின்தங்கியோர் நுண்கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நமது நாட்டில்தான் இடம்பெறுகின்றன.

எனவே, இதுபற்றி நாம் அவசரமும் அவசியமுமாகச் சிநதிக்க வேண்டும்.

இவ்வளவு பின்னடைவுகளில் நாம் இருந்து கொண்டு அறிவு ரீதியான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க முடியாது.

எனவே, பல்லின சமூகத்தாராகிய இலங்கையர் அனைவருக்கும் அறிவு ரீதியான புரட்சியே தற்போதைக்குத் தேவைப்படுகின்றது.” என்றார்.






SHARE

Author: verified_user

0 Comments: