11 Oct 2019

மட்டக்களப்பு சிவானந்தா விவேகானந்தா மாணவர் ஒன்றியத்தினால் (SVSA) வருடாவருடம் நடாத்தப்படும் இலவச கண் பரிசோதனை முகாம்

SHARE

மட்டக்களப்பு சிவானந்தா விவேகானந்தா மாணவர் ஒன்றியத்தினால் (SVSA)  வருடாவருடம் நடாத்தப்படும் இலவச கண் பரிசோதனை முகாம் இம்முறையும் மிகச்சிறப்பான முறையில் மஃட் விவேகானந்தா மகளீர் கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று 11.10.2019 காலை8.30 மணிக்கு நடைபெற்றது.இன் நிகழ்வானது வணக்கத்துக்குரிய சுவாமி தக்ஷஐனந்தஐ மகராஐ; (பொது முகாமையாளர் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு) அவர்களின் ஆசியுடன் இலங்கையின் முதற்தர கண் சத்திர சிகிச்சை நிபுனரான வைத்தியர்.பூ.ஸ்ரீகரநாதன் அவர்களின் தலைமையிலான குழுவினரால் நடாத்தப்பட்டது.

கல்லடி, உப்போடை, கல்லடி ,நாவற்குடா நொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் ,ஆகிய பிரதேசங்களில் உள்ள 8பாடசாலைகளுக்கான 2ம் ஆண்டில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான கண் பரிசோதனையில் கண்ணில் உள்ள குறைபாடுகளை  இனங்காணப்பட்ட வறியமானர்களுக்கு சிவானந்தா விவேகானந்தா மாணவர் ஒன்றியத்தினால் இலவச கண்ணாடிகளும் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில்; கௌரவ விருந்தினராக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்  திரு.கே.பாஸ்கரன் அவர்களும் மற்றும் விசேட அதிதியாக ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.ஐ.குணம் சவரிராஐ; அவர்களும் மற்றும் 8பாடசாலை அதிபர்களும்  கலந்து சிறப்பித்தனர்.

புலமைப்பரிசில 5ம் ஆண்டு; பரீட்சையில்; 179 புள்ளிகளைப்பெற்று கல்லடிப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவன் செல்வன் ச.மோகித் அவர்களுக்கான ஊக்குவிக்கும் முகமாக அவருக்கு ரூபா.10,000 பெறுமதியான பணத்தொகையும் வழங்கப்பட்டது. இதனோடு “வசந்தத்தில் வாழ்த்துதல்”   நிகழ்வும் நடைபெற்றது.

கண் பரிசோதனை முகாமிற்கு சுமார் 250ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கண் பரீசோதனையில் குறிப்பிட்ட சில  மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு  இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதொறும் இவ்வாறான கண்பரீசோதனை மூலமாக கண்களின் குறைபாடு  கண்டுபிடிக்கப்பட்டு வைத்திய நிபுனர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களின் கண்நோயினை கட்டுபடுத்த குறைக்க முடியும் என வைத்திய நிபனர் பூ.ஸ்ரீகரநாதன் தெரிவித்தார்.

முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.கே.பாஸ்கரன் அவர்களின்  உரையாற்றுகையில் அவ்வாறான செயற்திட்டமானது சமூகத்திற்கு பெரிதும் பயனுள்ள சேவை என்பதனையும் மற்றும் இவர்கள் ஒரு மாணவனின் சரியான வயதில் அதற்கான வைத்திய ஆலோசனைகளை வழங்குவது சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் உறுதுணையானது என்று தெரிவித்தார்.  














SHARE

Author: verified_user

0 Comments: