22 Oct 2019

மட்டக்களப்பு மாவட்டபடைப்பாளிகளின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டபடைப்பாளிகளின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு உள்ளுர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட படைப்பாளிகளின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் 2019 ஒக்டோபர் 25 மற்றும் 26 ஆந் திகதிகளில் மட்டக்களப்புபொது நூலககேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபையின் நூலகமற்றும் மக்கள் மேம்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இரு நாள் கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்டபடைப்பாளிடமிருந்து அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தமது புத்தகங்கள் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் விரும்பும் மட்டக்களப்பு மாவட்டபடைப்பாளிகள் எதிர்வரும் 2019 ஒக்டோபர் 20 ஆந் திகதிக்கு முன்னதாக 0652222484 மற்றும் 0774934113 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் இட ஓதுக்கீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் 2019 ஒக்டோபர் மாதம் 01 ஆந் திகதிn தாடக்கம் 31 ஆந் திகதிவரை அனுஷ்ட்டிக்கப்படுவதோடு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அறிவுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு, கல்லடி அரசடிமற்றும் புதூர் பொது நூலகங்களினால் வினாவிடைப்போட்டி, கவிதைப் போட்டிமற்றும் சித்திரப்போட்டி ஆகியபோட்டி நிகழ்ச்சிகளும் சிறுவர்கள் மத்தியில் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில்; மேலும் பலநிகழ்ச்சிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

இவ்வருட தேசியவாசிப்புமாதம் வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

SHARE

Author: verified_user

0 Comments: