23 Oct 2019

“குரு பிரதிபா பிரபா” விருது பெற்ற ஆசிரியரைக் கௌரவித்தல்.

SHARE
“குரு பிரதிபா பிரபா” விருது பெற்ற ஆசிரியரைக் கௌரவித்தல்.
2019 ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற ஆசிரியர் மற்றும் அதிபர்களைக் கௌரவிக்கும் நிகழ்விலே சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் குரு பிரதிபா பிரபா  விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 

இதிலே மட்.பட்.மண்டூர் - 13 விக்னேஸ்வரா ம.வி இல் ஆசிரியர் சேவையாற்றிவரும் புத்திசிகாமணி சிறிகாந் (ஆசிரியர்) இரண்டாவது தடவையாகவும் குரு பிரதிபா பிரபா விருதினைப் பெற்றுள்ளார்.

இவர் கலைமாணி (பிஏ) மற்றும் கல்விமாணி (பிஈடி) போன்ற கல்வித்தகைமைகளையும், கற்பித்தலில் தேசிய டிப்ளோமா (Dip.in.Education) மற்றும் சித்திரக்கலையில் டிப்ளோமா (Dip.In.Artsபோன்ற தொழிற்தகைமைகளையும் கொண்டுள்ளார். இவர் தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தினை கே.தெகி.நிவ்.பொலட்டகம தமிழ் வித்தியாலயத்தில் (சப்ரகமுவ மாகாணம்) 51⁄2 வருடங்கள் சேவையாற்றி சிறந்ததோர் மாணவர் சந்ததியினை உருவாக்கிவிட்டு அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு மட்.பட்.மண்டூர் - 13 விக்னேஸ்வரா ம.வி இற்கு காலடி எடுத்து வைத்தார்.  

தான் ஆசிரியராக கடமையேற்று தற்போது 11 வருடங்கள் பூர்த்தியாகிய நிலையில் தான் கற்பிக்கின்ற பாடத்தில் 100 வீத சித்தியினை தந்துகொண்டு வருகிறார். அதாவது இவர் சித்திரம் இந்து சமயம் போன்ற பாடங்களை 8, 9, 10, 11, 12, 13 ஆகிய தரங்களுக்கு கற்பித்து வருகிறார். இதில் கடந்த 5 வருட காலத்தில் சித்திரப்பாடத்தில் க.பொ.த (உயர்தரம்), க.பொ.த (சாதாரண)தரம் ஆகிய இரண்டிலுமே 100 வீத சித்தியினை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இவர் மாணவர் கல்வியில் மட்டுமல்ல விளையாட்டுப்போட்டி, தமிழ்தினப்போட்டி, ஏனைய சித்திர ஆக்கப்போட்டி மற்றும் சகல இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் துடிப்புடன் செயற்பட்டு எமது மாணவர்களை பல துறைகளிலும் தேர்ச்சிபெற்றவர்களாக செதுக்கிக்கொண்டு வருகிறார். சமூக மட்டத்திலும் சிறந்த ஆசிரியராக  போற்றப்படும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு குரு பிரதிபா பிரபா விருதினைப் பெற்று இரண்டாவது தடவையாக 2019 ஆம் ஆண்டும் பெற்றுள்ளார்.

ஆகவே சங்கர்புரம் சமூகம் சார்பாகவும் எமது வித்தியாலயம் சார்பாகவும், நியு ஸ்டார் விளையாட்டுக்கழகம் சார்பாகவும் இவரை பாராட்டி கௌரவிப்பதோடு இவரது சேவைகள் மெமன்மேலும் தொடர வாழ்த்துகின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: