31 Oct 2019

மட்டக்களப்பு மாவட்டத்திலும் சுமுகமான முறையில் தபால்மூல வாக்களிப்பு - இடம்பெற்றதாக தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திலும் சுமுகமான முறையில் தபால்மூல வாக்களிப்பு - இடம்பெற்றதாக தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார். 
மட்டக்களப்புமாவட்டத்திலும் வியாழக்கிழமை 31.10.2019 சுமுகமான முறையில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றதாகமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார்தெரிவித்தார். 

இந்தவாக்களிப்பு வெள்ளிக்கிழமையும் 01.11.2019  இடம்பெறுகின்றது. தேர்தல்கடமையில் 32 தெரிவத்தாட்சி உதவி அலுவலர்கள் 32 பேர் கடமையில் ஈடுபட்டுவருவதாகவும் 154 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் வாக்களித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 11983 வாக்காளர்கள் விண்ணப்பித்திருந்தனர். 

இவற்றில் 461 பேருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. தற்போது 11522 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வியாழன்வெள்ளி ஆகிய இரு தினங்களும்  வாக்களிக்கத் தவறுகின்றஅரச திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் நொவெம்பெர் மாதம் 7 ஆம் திகதி 8.45 முதல் 4.15 வரைக்கும் உள்ள காலப்பகுதியில் மட்டக்களப்பு உதவிதேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று நேரடியாக வாக்களிக்க முடியுமென மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிஉதயகுமார் தெரிவித்தார். மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள 32 உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளின் கடமைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் முகமாக பொலிஸ் பிரிவினரால் ரோந்து நடவடிக்கையும், காவல் நடவடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவத்தாட்சி உதயகுமார் மேலும் தெரிவித்தார்.‪






SHARE

Author: verified_user

0 Comments: