26 Sept 2019

ஆசிரியர்களின் ஸ்திரத்தன்மையே எமது தமிழர்களின் கல்வியைத் தீர்மானிக்கும் - பூ.பிரசாந்தன்

SHARE
ஆசிரியர்களின் ஸ்திரத்தன்மையே எமது தமிழர்களின் கல்வியைத் தீர்மானிக்கும் - பூ.பிரசாந்தன்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நிதி, நிர்வாக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுகின்றார்கள் என்றால் அதற்கு கால்கோலிட்டது தமிழர்களின் அரசியல் தலைமைகளின் கையாலாகாத தனமே,
அரசியல் பலம் இருந்து பயன்படுத்த தெரியாத தமிழ் தேசியம் பேசும் அரசியல் தலைமைகளை நம்பி நம்பி இன்று எம்மிடம் இருந்த அரச நிருவாகத்தினையும் இழக்கும் நிலை தோன்றியுள்ளது.

என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ. பிரசாந்தன் தெருவித்தார்.

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தனைத்தலைவராக் கொண்ட கிழக்கு தமிழ் மக்கள் விடுதலை ஆசிரியர் முன்னணியின் அங்குராட்பணக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஆசிரியர்களின் ஸ்திரத்தன்மையினை மேம்படுத்துவதனூடாகவே தமிழர்களின் கல்வி நிலையினை மேலோங்கச் செய்து அரச இயந்திரத்தினை இயக்கும் அதிகாரத்தினை தொடர்ந்தும் கிழக்கில் தமிழர்கள் வைத்துக் கொள்ளக் கூடிய நிலையினை பேணமுடியும்.
யுத்தகாலத்தில் அரசியல் அதிகாரம் அற்றுப் போன நிலையிலும் தமிழர்களின் இருப்பை பாதுகாத்தது தமிழர்களின் அரச அதிகாரிகார இயந்திரமே ஆனால் இன்று யாரை தமிழர்களின் ஏகபிரதி நிதிகள் என அரசியலில் நடாளுமன்றம் அனுப்பினோமோ அந்த தமிழ் தேசியத் தலைமைகள் கிழக்கினை அரசியல் ரீதியாக மாற்று சமூகத்திடம் தாரைவார்த்தது மட்டுமல்லாது தமிழ் அரச அதிகாரிகளின் இயந்திரத்தினையும் வலுவிளக்கச் செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கல்வி அதிகாரிகளையும் ஆசிரியர்களையும் வெகுவாக தம்முடன் பேசவில்லை தம்மை நிகழ்வுகளுக்கு அழைக்கவில்லை என்கின்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பிள்ளையானின் ஆட்கள், ஏனைய அரசியல் வாதிகளின் ஆட்கள் என தூற்றுவதும் பதவியுயர்வின்போது தட்டிப்பறிப்பதற்கு துணைபோவதும், இடமாற்றம் வழங்குவது என தமது கையாலாகாத அரசியல் தனத்தினைக் காட்டி வருகின்றனர். பட்டிருப்பு கல்விவலயத்தை இலக்குவைத்த இவர்கள் தற்போது கல்குடா கல்வி வலயத்தை தாக்க தொடங்கிவிட்டனர்.

நாம் ஒருபோதும் எமது தலைவர் சி. சந்திரகாந்தனின் ஆட்சிக்காலத்தில் எந்த அதிகாரிகளையும் அரசியல் கட்சி சாயம் பூசும் கண்ணாடி கொண்டு பார்க்கவில்லை திறமையான அதிகாரிகளுக்கு உரிய இடம் கொடுக்க பாடுபட்டோம் அரசியல் அதிகாரம் இல்லாது எதுவும் செய்யமுடியாது எனும் நிலையினை கிழக்கு தமிழர்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர்.

நேர்மையான இலக்கினை இதய சுத்தியுடன் அடைய பயணிக்கும் ஆசிரியர் சமூகத்திற்கும் அதிகாரிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி என்றும் ஏணிப்படியாக நிற்கும் இன்று அங்குராட்பணம்  செய்யப்பட்டுள்ள கிழக்கு தமிழ் மக்கள் விடுதலை ஆசிரியர் முன்னணியின் செயற்பாடுகளால் கிழக்கில் கல்வியின் மறுமலர்ச்சி ஏற்படவேண்டும் முன் உதாரணமான ஆசிரியர் முன்னணியாக இது சேவையாற்ற வேண்டும் அற்பணிப்புடன் அயராது சேவையாற்றக்கூடிய செயலாளராக அதிபர் நந்தகோபால் கிடைத்தது இச்சங்கத்திற்கு உயிரோட்டத்தினைக் கொடுத்துள்ளது எனவும் குறிப்பட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: