1 Aug 2019

வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிப்பதும் அடிப்படை மனித உரிமைமீறலாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவிப்பு.

SHARE
வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிப்பதும் அடிப்படை மனித உரிமைமீறலாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவிப்பு.
உள்வாரி பட்டதாரிகளுக்கு மட்டும் நியமனம் வழங்கப்பட்டும், வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிப்பதும் அடிப்படை மனித உரிமை மீறலாகும். இவ்விடயமாக ஜனாதிபதி சட்டத்தரணி கௌரி தவராசாவின் கவனத்திற்கு நான் சுட்டிக்காட்டி வெளிவாரி பாட்டதாரிகளின் பிரச்சனையை தெட்டத்தெளிவாக கதைத்துள்ளேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் உப தலைவர் ரீ.துவாரகன், மாவட்ட வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் பிரதிநிதிகள், மற்றும் பட்டதாரிகள் அனைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவரது அலுவலகத்திற்குச் செவ்வாய்க்கிழமை(30) மாலை5.00 மணியளவில் சென்று பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விடயமாகவும், பட்டதாரிகளை அரசாங்க வேலைவாய்ப்புக்கு உட்புகுத்துமாறு சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பட்டதாரிகளின் மத்தியில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்….

நாடுபூராகவும் உள்ள வேலையற்ற 10,000 பட்டதாரிகள் பிரதமர் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்ட உத்தியோகஸ்தர்கள் நியமனதுக்கு விண்ணபித்துள்ளார்கள். இவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்பு நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1538 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக அமைச்சின் கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது. 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரையும் மட்டக்களப்பில் ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் கணக்கெடுப்பு தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு தெரிவிக்கின்றது. ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 பட்டதாரிகள் எஞ்சியுள்ளதாக தகவல்களை வைத்து முடிவுகளை பெறக்கூடியதாகவுள்ளது.

2012ஆம் ஆண்டிலிருந்து எதுவித புள்ளிகள் இல்லாமல் நியமனம் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு வழங்கப்படவுள்ள நியமனங்களை பொறுப்பேற்காத வேலையற்ற பட்டதாரிகள், எஞ்சியுள்ளவர்களின் தகவல்களையும் முறையாக சேகரித்து அடுத்த கட்டமாக அதில் 10,000 பேருக்கு அடுத்த கட்டமாக திட்ட உத்தியோகஸ்தர்கள் பயிலுனர்களாக எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்பு இணைக்கப்படவுள்ளார்கள். இதன்மூலம் வேலையற்ற வெளிவாரி பட்டாதாரிகள் பிரச்சனை தீர்க்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, தேசிய ஒருமைப்பாடு பொருளாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல்கள் வரப்போகின்றது. இதனால் பட்டதாரிகளுக்கு சாதகமாக அமையவுள்ளது. இதனால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை கொடுத்து தாங்கள் சாதிக்கவேண்டும் என்பதில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உறுதியாகவுள்ளார்கள்.

உள்வாரி பட்டதாரிகளுக்கு மட்டும் நியமனம் வழங்கப்பட்டும், வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிப்பதும் அடிப்படை மனித மீறலாகும். இவ்விடயமாக ஜனாதிபதி சட்டத்தரணி கௌரி தவராசாவின் கவனத்திற்கு நான் சுட்டிக்காட்டி வெளிவாரி பாட்டதாரிகளின் பிரச்சனையை தெட்டத்தெளிவாக கதைத்துள்ளேன்.

அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் தகவல்களை ஒழுங்குபடுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். தற்போது 45 வரையும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது. இவற்றிலே டிப்ளோமா பட்டதாரிகளையும் இணைக்கின்றார்கள். இவையனைத்தும் உயரதிகாரிகளுடன் கதைத்தெடுத்த தகவல்கள் ஆகும். எங்களின் தேவைகளை இலாபம் தேடும் அரசியலுக்குள் உட்படுத்துவதற்கு எனக்கு உடன்பாடில்லை என அவர் இதன்போது தெரிவித்தார். 









SHARE

Author: verified_user

0 Comments: