சாரதியின் தூக்கக் கலக்கத்தினால் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மட்டு பொலிஸ் நிலையத்துடன் மோதி விபத்து.
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் செவ்வாய்கிழமை (30) காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் கம்பளையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மட்டு பொலிஸ்நிலைய மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அதில் பயணித்த பிரயாணிகள் சிலர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் தூக்கக் கலக்கத்தினால் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மட்டு பொலிஸ் நிலைய சுற்றுமதிலுடன் மோதியுள்ளதால் மதில் சேதமடைந்துள்ளது. விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இடம்பெற்ற விபத்துச் சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் வீதியோரமாக பாதசாரிகள் எவரும் அச்சந்தர்ப்பத்தில் கடந்து செல்லவில்லையென்பதால் தெய்வாதினமாக உயிரிழப்புக்கள் இதன்போது தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment