1 Jul 2019

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ஓய்வு பெற்றார்.

SHARE
(விஜய்)

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ஓய்வு பெற்றார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் சிங்களப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றிய திருமதி.வள்ளித்தங்கம் நவரெத்தினம்(வள்ளித்தங்கம் ரீச்சர்)  தனத 30 வருட ஆசிரிய சேவையில் இருந்து 30.06.2019 திகதி முதல் ஓய்வுபெற்றுள்ளார்.


இவர் மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் தொலைக்கல்வி மூலம் சிங்களமொழிப் பாடத்தில் விஷேட ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழையும், மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் தமிழ்மொழி மூலம் ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சிக் சான்றிதழையும் பெற்று அர்ப்பணிப்புடன் ஆசிரியப்பணியை தமது சமூகத்திற்காக  முன்னெடுத்தார்.

இவர்ஆசிரியர் நியமனத்தை பெற்று  முதன்முதலில் தனது அன்னை மண்ணான  துறைநீலாவணையில் உள்ள மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் 23.03.1990 திகதி முதல் கல்வியை ஊட்டத்தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு வலயத்தில் உள்ள மஞ்சந்தொடுவாய் உசைனியா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றார். அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சிங்களப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு நியமனம் பெற்று காத்திரமான கல்விச்சேவையை மட்டக்களப்பு வலயத்தில் முன்னெடுத்தார்.

இவ்வாறு ஆசிரிய ஆலோசகராக கடமையை ஏற்று மாணவர் மத்தியில் இரண்டாம் மொழியான சிங்களப் பாடத்தை மாணவர்களுக்கு ஊட்டி சிங்களமொழி மூலம்  இணைப்பாட விதானச் செயற்பாடுகளை முன்னெடுத்து இவ்ஆசிரியை வெற்றி கண்டவர். இதனால் மாணவர்களை பாடசாலை, வலய, மாகாண மட்டப் போட்டிகளுக்கு தட்டிக்கொடுத்த ஆசிரியை என்றால் யாரும் மறுக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

இவர் தனது கல்வியை சிங்கள மொழிமூலம் தரம் ஒன்று முதல் ஒன்பது வரையும் அம்பாறை நுகேலந்த சிங்கள கனிஸ்ட வித்தியாலயத்திலும், க.பொ.த.சாதாரண கல்வியை அம்பாறை றஜகலதென்ன மத்திய மாகாவித்தியாலயத்திலும், உயர்தர கல்வியை அம்பாறை பண்டாரநாயக்க பாலிகா மகாவித்தியாலயத்திலும் தனது எதிர்காலத்தை  திட்டமிட்டு படித்து முன்னேற்றம் கண்டார்.

இவர் படித்த பாடசாலை, தனது கிராமம், படிப்பித்த பாடசாலைகள் மற்றும் வேலை செய்த மட்டக்களப்பு கல்வி வலயத்தில் எல்லோருடனும் அன்பாகவும், பண்பாகவும், ஒழுக்கத்துடனும் பழகி எல்லோரையும் சமத்துவமாக மதித்து நடந்து கொண்டவர் என்பது விஷேட அம்சமாகவும். தனது வாழ்நாள் காலத்தில் இதுவரையும் எந்தவொரு எவரையும் பகைத்துக்கொள்ளாத ஆசிரியை ஆவார். ஆற்றல், அனுபவம், திறமை, தூரநோக்கு சிந்தனை மூலம் தனது குடும்பத்தை வளப்படுத்தியுள்ளார்.

இவர் துறைநீலாவணையை பிறப்பிடமாகவும், கல்லடி உப்போடையை வசிப்பிடமாகவும் கொண்டு குடும்பத்தாருடன் சிறபபுற வாழ்ந்து வருகின்றார். 

SHARE

Author: verified_user

0 Comments: