21 Jul 2019

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது - தமிழ் மக்கள் கூட்டணி பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன்.

SHARE
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது -  தமிழ் மக்கள் கூட்டணி பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன். 
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்துரலிய ரத்தினதேரர் என்னிடம் தெரிவித்தார். இந்த செயற்பாடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே எமது காணிகள், எமது பெண்கள், உரிமைகள் என்பன பறிபோகின்றன.  என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள அவர் சனிக்கிழமை(20) மகிழூர் கண்ணகிபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..

எமது கட்சி தன்னாட்சி, தட்சார்பு, தன்னிறைவு என்ற கோட்பாடுகளுக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டு வருகின்றது. எமது நோக்கம் எங்களை நாங்கள் ஆளக்கூடியதாக இருக்கவேண்டும் எங்களிலே எமக்கு நம்பிக்கை பிறக்கவேண்டும், அதிலிருந்து தன்னிறைவு காணவேண்டும். ஏப்ரல் 21 இற்கு முன்னர் இருந்த நிலமை வேறு தற்போதைய நிலமை வேறு தற்போது மக்களிடையே பலவிதமான சிந்தனைகள் பரவி விரவி வருகின்றன. முக்கியமாக தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே கடந்த காலத்தில் ஏதோ ஒரு வகையில் ஒரு சகோதரத்துவம் நிலவி வந்திருக்கின்றது என்றால் அதில் தற்போது சந்தேகம் வருகின்றது. அந்த சந்தேகம் எங்கு போய்க் கொண்டு விடப்போகின்றது என்பது தெரியாது. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், பிட்டும் தேங்காய்த்துருவலும் போல் சேர்ந்திருக்கும் இடம்தான் கிழக்குமாகாணம். அல்லது மட்டக்களப்பு மாவட்டம் என்றெல்லாம் கூறினார்கள், இந்த நிலையில் பல மாற்றக்களைக் காணக்கூடியதாகவுள்ளது. எமது மக்கள் தங்களுடைய காணிகளை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றார்கள். காணிசம்மந்தமான நமது உரிமைகள் குறைவடைந்து வருகின்றன. 

தமிழ்மக்கள், முஸ்லிம் மக்கள், கிறிஸ்த்தவ மக்கள் அனைவரும் தமிழர்கள் என்ற சிந்தனை இருந்து வந்தது. நான் படித்த காலத்தில் என்னுடன் மசூர் மௌலான இருந்தார். அவர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். அவர் அந்தக் காலத்தில் அவருடைய சிந்தனை அவர் தமிழன் என்றுதான். அதன்பின்னர்தான் அஸ்ரப் வந்தார் அவரும் ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்துதான் செயற்பட்டு வந்தார். 1970, 1971, 1972, காலங்களில் கம்பளையிலிருந்து பதுறுதீன் மகமூத் என்பவர் மந்திரியாக வந்ததன் பிற்பாடு முஸ்லிம் மக்களின் சிந்தனைகள் வேறுபட்டது. நாங்கள் ஏன் தமிழ் மக்களுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்காக போராட வேண்டும் என சிந்தித்தார்கள். இந்நிலையில் இந்த சிந்தனைக்குள் அஸ்ரப்கூட ஈர்க்கப்பட்டார்.  பின்னர் அவர்கள் தமிழ் மக்கள் என்ற எண்ணத்தை விட்டு அவர்கள் முஸ்லிம் மக்கள் என்ற எண்ணத்துடன், அவர்கள் ஒரு இனம் என்ற கருத்தை உட்புகுத்தினார்கள். ஆகவே ஒருமித்திருந்த தமிழர்களும், முஸ்லிங்களும், அக்காலகட்டத்திலிருந்து பிளவுபட ஆரம்பித்தார்கள். அக்காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அதில் சில முஸ்லிம் இளைஞர்களும், ஈடுபட்டிருந்தர்கள். பின்னர் காலம் செல்லச் செல்ல முஸ்லிம் மக்களின் மனங்களில் மாற்றங்கள் வந்து அவர்கள் அரசாங்கத்தின் பக்கம் சென்றார்கள், அப்போது தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு தற்போது ஏப்ரல் 21 இற்கு பின்னர் முஸ்லிம் மக்களை நம்ப முடியாத அளவிற்கு நிலமைகள் சென்று கொண்டிருக்கின்றது.

இதுவரைகாலம் முஸ்லிம் மக்கள் எமது காணிகளை கொள்வனவு செய்தார்கள், அல்லது கபளீகரம் செய்தார்கள் அதனை இனி விட்டுக்கொடுக்க முடியாது.  எமது தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் தற்போது எற்பட்டுள்ளது. இந்நிலைம இவ்வாறே சென்றால் கிழக்கு மாகாணத்தில் நாம் இல்லாமல் போய்விடுவோம். வடக்கு கிழக்கு இணைந்தால் முஸ்லிஙகளுக்கு ஒரு அலகு கொடுக்கவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. ஆனால் வடக்கு கிழக்கு இணையக்கூடாது என்பதில் முஸ்லிம் மக்கள் இருந்தார்கள், தற்போது வடக்கு கிழக்கு இணைந்தால் தமக்கு ஒரு அலகு தரப்படல் வேண்டும் என ரவூப் கக்கீம் சொல்கின்றார். அவர்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைந்தால் தாங்களும், தமிழர்களுடன் இணைந்து செயற்படலாம் என்ற சிந்தiயும் முஸ்லிம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. இயக்கத்தினை முடிவுக்குக் கொண்டுவந்துபோது முஸ்லிங்கள் பால்சோறு வழங்கினார்கள்  மாறாக ஏப்ரல் 21 பின்னர் இவ்வாறான எந்த செயற்பாடுகளிலும், தமிழர்கள் முஸ்லிங்களுக்கு எதிராக செயற்படவில்லை. ஆனால் இன்றும் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அவர்கள் தடையாக இருக்கின்றார்கள். 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்துரலிய ரத்தினதேரர் என்னிடம் தெரிவித்தார். இந்த செயற்பாடு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே எமது காணிகள், எமது பெண்கள், உரிமைகள் என்பன பறிபோகின்றன.  என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.














SHARE

Author: verified_user

0 Comments: