26 Jul 2019

ஊடக நிறுவனங்கள் சரியாக செய்தியை வெளிப்படுத்தினால் நாட்டிலே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் - நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் பணிப்பாளர் திருமதி.சந்தியா விஜய பண்டார.

SHARE
ஊடக நிறுவனங்கள் சரியாக செய்தியை வெளிப்படுத்தினால் நாட்டிலே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் -  நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் பணிப்பாளர் திருமதி.சந்தியா விஜய பண்டார்.
வடக்கின் செய்திகள் தெற்கிற்கு தவறான முறையில் பரப்பப்படுகின்றது. அது தெற்கின் செய்திகள் வடக்குக்கு பிழையான முறையில் சோடிக்கப்பட்டு செய்திகள் பரப்படுகின்றது. இதனால் இரண்டு சமூகங்களும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு கஸ்டப்படுகின்றது. இவ்வாறான செய்திகள் சரியான முறையில் ஊடக நிறுவனங்கள் வெளிப்படுத்தினால் நாட்டிலே உண்மையான நல்லிணகத்தை கட்டியெழுப்ப முடியும் என நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் பணிப்பாளர் திருமதி.சந்தியா விஜய பண்டார தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறையை மற்றும்  நிலைமாறுகால நீதியை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்பட்ட வழிவகைகள் மற்றும்  செயற்பாடுகள் சம்பந்தமாக பிரதேச ஊடகவியலாளர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு  மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் ஹோட்டலில்  வெள்ளிக்கிழமை(26) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வில் அதன் பணிப்பாளர் சந்தியா விஜய பண்டார, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் சஞ்சை லியணகே, செய்திப் பிரிவின் பணிப்பாளர் விமுர்க்தி துசாந்தர், மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பைச் சேர்ந்த  ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
நாட்டில் உள்ள அரசாங்கத்தினர், அரசியல் கட்சியினர், சிவில் சமூகத்தினர், நல்லிணக்க செயலகம் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தற்போது நாடளாவியரீதியில் செயற்படுகின்றனர். நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும்போது கோபம், குரோதம், இனவாதம், மறந்து கட்டியெழுப்ப வேண்டும். நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்த மக்கள்தான். எங்களுக்குள் ஒற்றுமையாக வாழப்பழகிக் கொள்ளாவிட்டால் எப்படி நாட்டிலே ஒற்றுமையாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். ஆளுக்கு ஆள் அடித்து, இனவாதத்தை கக்கி நல்லிணகத்துக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம். முப்பது ஆண்டு காலமாக நாட்டில் நிலவிய  யுத்தத்திலிருந்து நாங்கள் விடுவிப்பதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு மெல்ல மெல்ல சமாதானத்துக்கும், நல்லிணக்கத்துக்கும், விடுவிக்கப்பட்டோம். அனைவரும் நியாயமாக சிந்தித்து நல்லிணக்க பொறிமுறை மூலம் உண்மையான சமாதானத்தை வென்றெடுக்க முயற்சிப்போம்.

தற்போது நல்லிணக்கத்துக்கு முரணான வகையில் செய்திகள் நாட்டில் வெளிவருகின்றன. வடக்கின் செய்திகள் தெற்கிற்கு தவறான முறையில் பரப்பப்படுகின்றது. அது தெற்கின் செய்திகள் வடக்குக்கு பிழையான முறையில் சோடிக்கப்பட்டு செய்திகள் பரப்படுகின்றன. இதனால் இரண்டு சமூகங்களும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு கஸ்டப்படுகின்றன. இவ்வாறான செய்திகள் சரியான முறையில் ஊடக நிறுவனங்கள் வெளிப்படுத்தினால் நாட்டிலே உண்மையான நல்லிணகத்தை கட்டியெழுப்ப முடியும். உண்மையில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும். 

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். ஊடக அறிக்கையிடல் காத்திரமானதாக இருக்க வேண்டும்.

1983 ஆம் ஆண்டு அன்று நாட்டிலே ஏற்பட்ட யுத்தத்தை அன்று ஏற்படுத்தியவர்கள் சிந்தித்திருந்தால் இன்று நாட்டிலே பாரியளவு சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட்டு பொருளாதாரம் இரட்டிப்பாக அதிகரிக்கும். அதனால் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற பேதம் களையப்பட்டு நாட்டின் தேசப்பற்றாளர்கள் என்ற நல்லிணக்கம் வலுவடைந்து நாட்டில் உண்மையான சமாதானம் மலர்ந்திருக்கும். நாம் அனைவரும் நாட்டிலே ஒன்றிணைந்து நல்லிணகத்தை ஏற்படுத்த முடியும். அதற்காக நல்லிணக்கமில்லாமலும், கோபம், குரோதத்துடன் துப்பாக்கியை இளம் சமுதாயத்தினரிடம் கொடுத்து இன்னுமொரு யுத்தத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டாம். மீண்டுமொரு இனவாத யுத்தம் ஒன்று நிகழக்கூடாதளவுக்கு நாட்டில் உள்ளவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். 

தென்னாபிரிக்காவில் ஏற்பட்டது போன்றுதான் நாட்டில் ஏற்பட்டது. நாட்டில் உள்ளவர்களின் மனதில் குப்பைகளை சேமிக்க வேண்டாம். நாட்டை இரண்டாக பிரிப்பதற்கு நல்லிணக்க பொறிமுறை அமையக்கூடாது. உயிரோட்டமுள்ள நாட்டில் உண்மையான நல்லிணகக்கம் தேசியமயப்படுத்த வேண்டும். நாற்பது வருடகாலமாக  தோளுக்குமேல் கைபோட்டு வாழ்ந்தவர்கள் நேற்று சீனாவெடி வெடித்தால் பயப்படத் தேவையில்லை. எனவே மக்கள் மத்தியில் தவறான செய்திகளை பரப்புரை செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: