21 Jun 2019

கல்முனையில் நான்காவது நாளாக தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்.

SHARE
தமிழ் மக்கள் செறிந்து வாழும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி கல்முனைப் பிரதேச சர்வமதத் தலைவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கடந்த நான்கு நாட்களாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்னால் கொட்டகை அமைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ள அவர்களின் உடல் நிலையும், மோசமடைந்து வருகின்றன.

இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக சேனைக்குடியிருப்பு, கல்முனை, மற்றும் பெரியகல்லாறு போன்ற பல பகுதிகளிலுமுள்ள மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு உணவுத்தவிர்ப்புப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களைப் பார்வையிட்டதோடு, போராணியாக வந்தவர்களும். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளில் அமைந்து போராட்டத்திற்கு ஆதரவு வழக்கினர்.

இந்நிலையில் மட்டக்கள்பு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், என பலரும் இப்போராட்டத்தில் இணைந்து வலுச்சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தினதேரர், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்தின், மற்றும், மட்டக்களப்பு மங்களராமய விகாராத்திபதி அம்பிட்டிய சுமணரெத்தினதேரர், உள்ளிடடோர் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் கல்முனை சுபத்திரா ராமய விகாராத்திபதி சங்கரெத்தின தேரர் உள்ளிட்ட குழுவினரை நேரில் சென்று பார்வையிட்டனர். 

இதன்போது உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவர்களுக்கு நீர் அருந்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்தரலிய ரத்தின தேரர் குடிநீரரை வழங்கியபோதும் அவரகள் எமது போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் நாங்கள் எந்த ஆகாரங்களையும் உட்கொள்ளப் போவதில்லை என தெரிவித்தனர்.








































SHARE

Author: verified_user

0 Comments: