10 Jun 2019

மட்டக்களப்பு மக்களுக்கு முதல் கட்டமா 4000 பொருத்து வீடுகள் வழங்கப்படவுள்ளன.

SHARE
மட்டக்களப்பு மக்களுக்கு முதல் கட்டமா 4000 பொருத்து வீடுகள் வழங்கப்படவுள்ளன. 
விடு மற்றும் காணிகள் அற்ற எமது மட்டக்களப்பு மக்களுக்கு அமைச்சர சஜித் பிரேமதாச அவர்களின் அமைச்சினூடாக  அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். காணியிருந்து வீடு இல்லாதவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படவுள்ளன அண்மையில் கொண்டுவரப்பட வீட்டுத்திடத்தில 4750 வீடுகள் நிருமாணிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 5250 வீடுகள் நிருமாணிக்கப்படவிருக்கின்றன. தற்போது நாங்கள் பொருத்து வீட்டுத்திட்டத்தைக் கொண்டுவரவுள்ளோம். இவ்வீடுகளில் 100 வருடங்கள் வசிக்கலாம், 28000 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன அவற்றுள் 7000 வீடுகள் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதனை மிகவும் சிரமத்தின் மத்தியில் கிடைக்கப் பெற்றுள்ளது. 1250000 ரூபாய் பெறுமதியான இந்த வீடு சகல வசதிகளுடனும் கூடியதாக அமையப் பெறவுள்ளது. எதிர்வரும் மாதம் இவ்வீட்டுத் திட்டத்தை மட்டக்களப்பில் குறைந்தது 4000 வீடுகளையாவது முதல் தடைவ கொண்டு வருவதங்கு முயற்சிக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 17000 வீடுகள் தேவையாகவுள்ளது. ராஜபக்ச அவர்களும், ஜனாதிபதி அவர்களும் இந்த அரசாங்கத்தைக் குழப்பாமலிருந்தால் 17000 பேருக்கும் வீடுகள் வழங்குவதங்கு உரிய ஒழுங்குகளைச் செய்வோம். 

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரினால் கம்பரெலிய வேலைத் திட்டத்தினூமாக 60 லெட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட 3 வீதிகள் திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு களுதாவளையில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  தமிழ் தேசிக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா),  கிராம பெரியோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும்  தெரிவிக்கையில்… 

எமது உறவுகள் முன்பு விட்டுச் சென்ற பணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு  மேற்கொண்டு வருகின்றது. 2009 ஆம் ஆண்டி பின்னர் 2010 ஆம் ஆண்டு நாடாhளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதி 50 லெட்சம் ரூபாய் மாத்திரம்தான் அதனை வைத்துக் கொண்டுதான் நாங்கள் மாவட்டம் பூராகவும், அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு பகிர்ந்தளித்து வந்தோம்.  நாங்கள் எமது மக்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியலும், சர்வதேசத்திலும், குரல் கொடுத்தோம். ஆனாலும், யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மண்ணிலே அபிவிருத்தி என்பது மிகவும் குறைந்த நிலையிலே சென்று கொண்டிருந்தது.  யத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதியை அபிவிருத்தி செய்யுங்கள் என்று மேலைத்தேய நாடுகள் அப்போதிருந்த ராஜபக்ச அரசுக்கு பெருந் தொகையான நிதியை வழங்கியிருந்தன. ஆனால் அதிலே கடனாக வருகின்ற நிதியை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவிட்டு மாநியமாக வருகின்ற நிதியையெல்லாம் தென்பகுதியில் கொட்டினார்கள். அதற்கான செல்லப்பிள்ளைகளாக சிலருக்கு உயர் பதவிகளைக் கொடுத்து இந்த மண்ணிலே ராஜபக்ச அழகு பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்திருந்தும் அவரால் கிழக்கு மாகணாத்தில் ஒரு தொழிற்சாலையைக்கூட நிருமாணிக்க முடிந்திருக்கவில்லை.  அவர் மகிந்த ராஜபக்சவுக்கு தலையாட்டும் பொம்மையாகவே இருந்து செயற்பட்டார். ஆனால் அதன் பின்னர்;  கிழக்கு மாகாணத்தில்  இரண்டரை வருடத்திற்கு இருந்த சகோதர இனத்தைச் சேர்ந்தவர் அவரது மக்களுக்க ஆடைத் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்துள்ளார். 

தமிழ் மக்க்ள 2015 ஆம் அண்டு மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பி புதிதாக மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்டுவந்தோம். அவர்கூட 2015 ஆம் அண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் பற்றிய எந்தச் சிந்தனையும் அற்றவராகத்தான் இருந்தவர். அது மாத்திரமின்றி யுத்தகாலத்தில் பாதுகாப்புப் பிரதியமைச்சராக இருந்து கடந்த யுத்தத்தை அவரும் முன்னின்று செயற்படுத்தியவர். இந்த நாட்டிலே மாறி மாறி தேசியக் கட்சிகள் ஆட்சிக்கு வரும் அதில் ஒரு கட்சி தமிழர்களுக்குத் தீர்வை வழங்க முற்பட்டால் மற்றையகட்சி எதிர்ப்பது வழமையாகியிருந்தது. பின்னர் 2015 இல் இரண்டு பிரதான தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்தது. அதற்கெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில ஆதரவை வழங்கியது என்ற காரணத்தினால் எமக்கு சில அபிவிருத்தித் திட்டங்களை வழங்கியிருந்தார்கள். 

விசேட வேலைத் திட்டங்கள் என்ற வகையில் எமக்கு வருடாந்தம் 2 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டது. ஆனால் அதனை நாங்கள் சுருட்டிக் கொண்டு சென்றதாக சிலர் தேர்தல் காலங்களில் எம்மீது குற்றம் சுமத்தினார்கள். ஆனால நிதி எவ்வாறு வருவது பிரதேச செயலகத்திற்குத்தான் வருவது, செலவு செய்வதும் பிரதேச செயலக அதிகாரிகள்தான், நிதி எமது கைக்கு வராது, அனால் எமக்கு அவ்வாறு சொன்னார்கள். பின்னர் கம்பரெலிய (ஊரகஎழுச்சித்திட்டம்) எனும் திட்டம் முன்வைக்கப்பட்டு, கடந்த வருடம் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை நாங்கள் பாடசாலைகள், மலசலகூங்கள், ஆலயங்கள், வீதிகள், மைதானங்கள், உள்ளிட்ட பல விடைங்களுக்கு நாங்கள் இந்நிதியை ஒதுக்கீடு செய்தோம். அத்திட்டம் சிறப்பாக இடம்பெற்று வருவதற்கு முன்னர் ஒக்டோபர் 28 ஆம் திகதி ஜனாதிபதியின் சூழ்ச்சியார் திடீரென் ராஜபக்ஸ உதயமானார், அப்போது பேலி அமைச்சரவையும் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றதே கலைக்கப்பட்டது.

இந்த நாட்டில் முதலில் அரசியலமைபு யாருக்கத் தெரியவேண்டுமோ, யார் அரசியலமைப்பை கடைப்பிடிக்க வேண்டுமோ அவரே அந்த  அரசியலமைப்பை மீறியதைக் கண்டோம். அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதன் முதலில் நீதிமன்றம் சென்றது, பின்னர் ஏனைய கட்சிகள் சென்றன. இறுதியில் 19 வது திருத்தச் சட்டத்தின் கிழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது பிழை என தீர்ப்பு வந்தது. பின்னர்தான் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டி ஆட்சியமைப்பதற்கு, அப்போதும்கூட ராஜபக்ச தரப்பும், ரணில் விக்கிரம சிங்க குழுவினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசினார்கள்.  பின்னர்தான் ஜனநாயகத்தை ஓரளவு மத்தித்தவர்கள் என்ற ரீதியில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 14 பேரும் ஆரதவு வழங்கினோம். இன் பிரதமராக இருப்பதற்கு ஏனையவர்கள் அமைச்சர்களாக இருப்பதற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்தான் காரணம். 

ஐக்கிய தேசிய் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் கணேசமூர்த்தி அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு அவர்மாத்திரம் தான் அபிவிருத்தி செய்து வருவதாக பேசித்திரிகின்றார். கணேசமூர்த்தி அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவியவர், கடந்த தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தல் கணேசமூர்த்தி ராஜபக்சவின் பக்கம் தாவியிருப்பார். அவர் அபிவிருத்தி செய்கின்றார் என்றால் பிரதியுபகாரமாக அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்ட பிச்சையாகும்.  நாங்கள் அமைச்சுப் பதவி எடுக்காமல், அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு அமைச்சுப் பதவியை நிராகரித்துக் கொண்டு வந்துள்ளோம். அமைச்சுப் பதவி எடுத்துவிட்டு இத்தனை காலமும் எமது மக்கள்பட்ட துன்பியல் சம்பவத்தை மறந்து செயற்படுவசதற்கு நாங்கள் தயாரில்லை. நாங்கள் அபிவிருத்திகளில் ஈடுபட்டுக் கொண்டும் அபிலாசைக்கான போராட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். எனவே யார் கொண்டு வந்தாலும் அவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டு வந்த அபிவிருத்தித் திட்டங்கள்தான்.  எனவே எமது கட்சிக்கோ, எமது தலைவருக்கோ எதிராக கருத்துக்களை வெளியிடுவதற்கு பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய Nசியக் கட்சியின் அமைப்பாளர் கணேசமூத்தி அருகதையற்றவர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில 4 ஆசனங்களைப் பெற்றிருப்போம் ஆனால் கணேகமூர்த்தி அவர்கள் வாக்குகளைப் பெற்று ஓட்டமாவடியிலுள்ள அமீரலிக்குக் கொடுத்துவிட்டார். அங்கே குறைந்த வாக்குகளைப் பெற்றிருந்த அமீரலி கணேசமூர்;த்தி அவர்கள் பெற்றுக் கொடுத்த வாக்குகளால் நாமாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

விடு மற்றும காணிகள் அற்ற எமது மட்டக்களப்பு மக்களுக்கு அமைச்சர சஜித் பிரேமதாச அவர்களின் அமைச்சினூடாக  அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். காணியிருந்து வீடு இல்லாதவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படவுள்ளன அண்மையில் கொண்டுவரப்பட வீட்டுத்திடத்தில 4750 வீடுகள் நிருமாணிக்கப் பட்டிருக்கின்றன. இன்னும் 5250 வீடுகள் நிருமாணிக்கப்படவிருக்கின்ற. தற்போது நாங்கள் பொருத்து வீட்டுத்திட்டத்தைக் கொண்டுவரவுள்ளோம். அவ்வீடு 100 வருடங்கள் இருக்கும். 28000 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன அவற்றுள் 7000 வீடுகள் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதனை மிகவும் சிரமத்தின் மத்தியில் கிடைக்கப் பெற்றுள்ளது. 1250000 ரூபாய் பெறுமதியான இந்த வீடு சகல வசதிகளுடனும் கூடியதாக அமையப் பெறவுள்ளது. எதிர்வரும் மாதம் இவ்வீட்டுத்திட்டத்தை மட்டக்களப்பில் குறைந்தது 4000 வீடுகனையாவது முதல் தடைவ கொண்டு வருவதங்கு முயற்சிக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 17000 வீடுகள் தேவையாகவுள்ளது. ராஜபக்ச அவர்களும், ஜனாதிபதி அவர்களும் இந்த அரசாங்கத்தைக் குழப்பாமலிருந்தால் 17000 பேருக்கும் வீடுகள் வழங்குவதங்கு உரிய ஒழுங்குகளைச் செய்வோம். 

இவற்றைத்தவிர மலசலகூடங்களை வழங்கவுள்ளோம்,  ஒரு மலசல கூடத்திற்கு 75000 ரூபா செலவில் கட்டப்படவுள்ளன. வீடுகளும் திருத்தப்படவுள்ளன. மின்சாரம் இல்லாத மக்களுக்கும் மின் இணைப்புக்கள் பெற்றுக்கொடுக்கவுள்ளொம், நீர் வழங்கல் திட்டத்தையும் அமுல் படுத்தவுள்ளோம். சமூர்த்தி உதவிகளையும் வழங்கவுள்ளோம், 

எமக்கு ரணில் விக்கிரமசிங்க தந்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவிலலை. ஓரளவுதான் அதனை செய்துவருகின்றார். ஒருதொழிற்பேட்டை அமைப்பதற்கு ஒரு நிதியததையும் ஏற்படுதியுள்ளோம். என அவர் தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: