14 Jun 2019

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு, களிக்குளம் கிராமங்களில் விவசாயிகளின் தென்னைமரங்களை புதன்கிழமை(12) காட்டுயானைகள் துவசம் செய்துள்ளன.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு, களிக்குளம்  கிராமங்களில் விவசாயிகளின் தென்னைமரங்களை புதன்கிழமை(12) காட்டுயானைகள்  துவசம் செய்துள்ளன.
புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் இரண்டு விவசாயிகளின் தோட்டத்தினுள் காட்டுயானைகள்   ஊடுருவி அங்குள்ள தொன்னை மரங்கள் சிலவற்றை அழித்து துவசம் செய்துள்ளன. 

காட்டுயானைகளின் இவ்வாறான அழிவினால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

அப்பகுதி மக்கள் அன்றாடம் காட்டு யானைகளின் தொல்லைகளினால் இரவில் தூக்கமின்றி அச்சத்தில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அப்பிரதேசத்தில் யானை பாதுகாப்பு வேலியில் மின்சாரம் இல்லாமல் உடைந்து சேதமடைந்துள்ள காரணத்தால் காட்டுயானைகள் தங்கு தடையின்றி தமது தோட்டத்திற்குள் இறங்கி தென்னைமரங்கள், வாழைமரங்கள், மற்றும் தோட்டங்களையும் அழித்துவிட்டுச் செல்வதாகவும் இதனை பொறுப்புமிக்க அதிகாரிகள் யாரும் பொருட்படுத்தாமல் பாராமுகமாக இருப்பதாகவும்  அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 





SHARE

Author: verified_user

0 Comments: