2 May 2019

மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து அவர்களைக் கண்ணியப்படுத்துவதன் மூலம் நெருக்கடிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம்

SHARE
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து அவர்களைக் கண்ணியப்படுத்துவதன் மூலம் நெருக்கடிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் என தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம் தெரிவித்தார்.
நாட்டின் சமகால அசாதாரண சூழ்நிலையில் தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்புதற்காக தேசிய சமாதானப் பேரவை நாடு பூராகவும் முன்னெடுத்து வரும் செயற்திட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படும் “இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவோம்” செயற்திட்டம் பற்றி அவர் விவரம் தெரிவித்தார்.

இது பற்றி புதன்கிழமை 01.05.2019 மேலும் தெரிவித்த அவர், இன, சாதி, மதவாத, அரசியல், பிரதேச, மொழிவாத  அடிப்படைகளில் ஒட்டுமொத்தமாக பிளவுகளாலேயே நாம் பழக்கப்பட்டு வளர்க்கப்பட்டு விட்டோம்.

அதன் விளைவுகளையே கடந்த 30 வருடகால உள்நாட்டு ஆயுத முரணபாடுகளின்போதும் அனுபவித்து இழப்புக்களைச் சந்தித்தோம்.

இப்பொழுதும் நமக்குள் பல்வேறு பிளவுகள் உள்ள நிலையில்தான்  நாம் பல தரப்பட்ட வடிவங்களில் நடமாடுகின்றோம்.

எனவே, இந்த பொய் நம்பிக்கைகளைக் களைந்து அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து அழிவுகளைத் தடுத்து நிறுத்தி அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கியே தேசிய சமாதானப் பேரவை கடந்த 24 வருட காலமாகப் பயணிக்கிறது. அந்த நோக்கத்தை அடையும் வண்ணம் நாடு பூhhகவும்  மாவட்ட சர்வமதப் பேரவைகளில் துறைசார்ந்தவர்களை உள்வாங்கி சமாதான சௌஜன்ய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

அடுத்தவர்களின் தேவைகள் பிரச்சினைகள் என்பனவற்றை நிறைவேற்றிக் கொடுக்க நாம் தயாராக இல்லை என்பது நமது பாரம்பரிய வழி நடத்தலாக இருந்து வந்து விட்டது. இது பிரிவினைகள் ஏற்படுத்திய விளைவுகளாகும். இது நம் எல்லோருக்கும் உரிய நாடு என்று சிந்திப்பதைத் தவிர்த்து விட்டு இங்குள்ள அனைத்து சௌபாக்கியங்களும் எனக்கேதான் எல்லாம்  என்று சிந்திப்பதே பிரதான பிரச்சினைகளுக்குக் காரணமாய் அமைந்து விடுகின்றன.

இதைப் பொதுவான நாடாக அனைவருக்கும் நன்மை பயக்கும் நாடாக நம் சிந்தனைகளை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் சேவை செய்யவும் சேவைகளை வழங்கவும் கூடியதான பரந்த மன நிலையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அண்மையில் இடம்பெற்ற நாசகாரத் தாக்குதலால் நாடு அமைதியிழந்து விட்டது.
அமைதியிழந்த நாட்டை மீட்டெடுத்து மக்களிடையே சமாதானத்தையும் இன நல்லுறவையும் ஏற்படுத்தும்வகையில் “இனங்களுக்கிடையே ஒற்றுமையை எற்படுத்துவோம்|| எனும் செயற்திட்டம் அமுலாகிறது” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: