10 May 2019

குண்டு வெடிப்பு காரணமாக மக்கள் ஒரு யுத்த பீதியில் இருக்கிறார்கள். - மட்டு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்.

SHARE
இந்த குண்டு வெடிப்பு காரணமாக மக்கள் ஒரு யுத்த பீதியில் இருக்கிறார்கள். பாதுகாப்பு பிரச்சினைகள் அவசரகாலசட்ட அமுலாக்கம் போன்றவற்றை வைத்துக் கொண்டு எமது நகரை அண்டிய பிரதேச வர்த்தகர்கள் பொருட்களை கட்டுப்பாட்டு விலையிலும் அதிக விலையில் விற்பதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. 
என மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில் மட்டு மாநகர நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு சம்பந்தமாக அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

பொதுமக்களிடம் நாம் வேண்டிக்கொள்வது அவ்வாறு அதிக விலையில் விற்பதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அக்கடைகளில் இருந்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு அவற்றை மாநகர சபையிடம சமர்ப்பித்தால் நாம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். 

அண்மையில் கிடைத்த புகார் என்னவெனில் மட்டு நகரின் மிக பிரபலமான வர்த்தகநிலையத்தில் பொருட்களின் விலையை அல்லது பொருட்களுக்கான பற்றுச்சீட்டை கேட்டால் அவரகளுக்கு பொருட்களை வழங்க வேண்டாம் என வர்த்தக முதலாளி கூறுகிறாராம். இவ்வாறான வர்த்தகநிலையங்களுக்கெதிராக நாம் நடவடிக்கை எடுப்போம். 

பள்ளிவாசலுக்கு வந்து செல்பவர்களை பதிந்து தற்காலிக அடிப்படையில் அவர்களுக்கு அறைகளை வாடகைக்கு விட கூடாது எனவும் ஒரு நிபந்தனை விதிக்கவுள்ளதாகவும் வின்சன்ட் பாடசாலைக்கு அருகில் உள்ள எல்லைச் சுவரை உயர்த்த பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

பிரத்தியேக வகுப்புக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு கட்டளை விதித்துள்ளோம். பெற்றோர்களே பிள்ளைகளின் கல்வியை விட அவர்களின் பாதுகாப்பே அவசியம் ஆகவே நீங்கள்தான் பிரத்தியேக வகுப்புக்களுக்கு அழுத்தம் கொடுத்து பாதுகாப்பை உறுதிப் படுத்தவேண்டும்.




SHARE

Author: verified_user

0 Comments: