14 May 2019

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 42,234 ஹெக்டேயர் பெரும்போக நெற்செய்கைக் காணிகளில், 24,255 ஹெக்டெயர் காணிகளில் மாத்திரமே, நெற்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதி

SHARE
பருவகால மழை பெய்யாத நிலையில், இம்முறை திருகோணமலை மாவட்டத்திலுள்ள 42,234 ஹெக்டேயர் பெரும்போக நெற்செய்கைக் காணிகளில், 24,255 ஹெக்டெயர் காணிகளில் மாத்திரமே, நெற்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதியை, மாவட்ட விவசாயத் திணைக்களம் வழங்கியுள்ளது.  
7,911 ஹெக்டெயர் காணியில் முன்னெடுக்கப்பட்ட நெற்செய்கைக்கான வேலைகள் நிறைவடைந்துள்ளது என்று கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பளர் எஸ்.எம்.ஹுசைன் தெரிவித்தார். 
திருகோணமலை மாவட்டத்தில், சிறிய, நடுத்தரக் குளங்களின் நீரைக் கொண்டே விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறு போகச் செய்கைக்கானப் போதியளவு நீர், குளங்களில் காணப்படுவதாகவும் மழை கிடைக்கப்பெறுமானால், நெற் செய்கைக்குத் தேவையான மேலதிக நீரை, தேக்கி வைத்துக்கொள்ள முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  
SHARE

Author: verified_user

0 Comments: