14 May 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் சுமுகமான நிலையில் கல்வி நடவடிக்கைகள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் 115ஆசிரியர்களுக்கு பதிலீடுயின்றி இடமாற்றம்.

SHARE
(விஜய்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் சுமுகமான நிலையில் கல்வி நடவடிக்கைகள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் 115ஆசிரியர்களுக்கு பதிலீடுயின்றி இடமாற்றம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 115 ஆசிரியர்களுக்கு பதிலீடுயின்றி தற்போது தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மட்;டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக்கல்வி பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு வலயங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடையம் குறித்து மேற்படி வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் செவ்வாய்கிழமை (14) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது அவர்கல் மேலம் தெரிவித்ததாவது…. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா வலயத்திலிருந்து 68 ஆசிரியர்களும், பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து 22 ஆசிரியர்களும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 16 ஆசிரியர்களும், மட்டக்களப்பு வலயத்திலிருந்து 9 ஆசிரியர்களுமாக மொத்தம் 115 ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேற்குறித்த கல்வி வலயங்களில் சுமூகமாக பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், குறித்த பாடசாலையில் எதுவித அசம்பாவிதம் ஏற்படாத வகையிலும் முன்னிலைப்படுத்தி வலயக்கல்வி பணிப்பாளர்கள் விடுவிப்பதாக தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாசிரியர்கள் தங்களின் வசதிக்கேற்ப, கஸ்டப் பிரதேச பாடசாலைகளிலிருந்தும் இன்றைய அச்சமான சூழ்நிலையை  காரணத்தைக்காட்டி இடமாற்றம் பெற்று வெளியேறி வருகின்றார்கள். பாடசாலைக்கு மாணவர்களின் வரவு குறைவாக இருக்கின்ற நிலையில் இவ்வாறான தற்காலிக இடமாற்றத்தால் மாணவர்களின் கல்வி மேலும் பாதிக்கப்படுகின்றது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதனால் தொடந்தும் தமிழ் பிரதேச மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, முஸ்லிம் பிரதேசத்தில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்களை மேற்குறித்த வலயத்திற்கு இடமாற்றம் வழங்கி இயல்பான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு கல்வி வலயங்களைச் சேர்ந்த சகோதர முஸ்லிம் பெண் ஆசிரியர்களுக்கே தற்காலிக இடமாற்றம் யூன் 28 ஆந் திகதிவரை  வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிக ஆசிரியர் இடமாற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழ் பிரதேசத்திற்கு கடமையாற்றுவதற்கு ஆர்வம்முள்ள முஸ்ஸிம் பிரதேசத்தில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்கள் மாகாண கல்வித் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு இடமாற்றம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாகாணகல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு  தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: