30 Apr 2019

வவுணதீவு பொலிஸ் படுகொலையுடன் தொடர்புடைய உண்மையான கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டிருந்தும் சம்பவத்துடன் தொடர்பில்லாத என்னுடைய கணவர் அஜந்தனை தடுத்து வைப்பது நியாயமல்ல.

SHARE
வவுணதீவு பொலிஸ் படுகொலையுடன் தொடர்புடைய உண்மையான கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டிருந்தும் சம்பவத்துடன் தொடர்பில்லாத  என்னுடைய கணவர் அஜந்தனை தடுத்து வைப்பது நியாயமல்ல.
வவுணதீவு பொலிஸ் படுகொலையுடன் தொடர்புடைய உண்மையான கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டிருந்தும் சம்பவத்துடன் தொடர்பில்லாத  என்னுடைய கணவர் அஜந்தனை தடுத்து வைப்பது நியாயமல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றமிழைக்காத  என்னுடைய கணவரை விடுதலை செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு என் கணவரை விடுதலை செய்யாவிட்டால் நானும், எனது 5 பிள்ளைகளும் நஞ்சு குடித்து தற்கொலை செய்வோம் என திருமதி செல்வராணி இராஜகுமாரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் படுகொலையுடன் தொடர்பில்லாத சந்தேகத்தின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ள காதிர்காமத்தம்பி-இராஜகுமாரன்(அஜந்தன்)விடுதலை சம்பந்தமாக மட்டக்களப்பு வோய்ஸ் ஓவ் மீடியா நிலையத்தில் வைத்து செவ்வாய்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவரது மனைவி திருமதி செல்வராணி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:-

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடந்த வருடம் (2018 நவம்பர் 30) படுகொலை செய்தவர்களும்  ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகள்தான் என்பது சனிக்கிழமை(27.4.2019)கிடைக்கப்பெற்ற தகவல்கள்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

வவுணதீவு பொலிசார் இருவர் கொலை செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் (27) 5மாதங்களை கடந்துள்ளநிலையில் அந்த கொலைக்கான சூத்திரதாரி யாரென்று கண்டு கொள்ளப்பட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ்.எனும் தீவிரவாத அமைப்பு கடந்த (21)தற்கொலை தாக்குதல் நடத்தியபின்னரான விசாரணையே வவுணதீவு பொலிசாரின் கொலைக்குரிய உண்மை வெளிவந்துள்ளது.பொலிசார் வைத்திருந்த துப்பாக்கியுடன் கொலைக்கு பயன்படுத்திய வாகனத்தின் சாரதியும் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு உண்மையான சூத்திரதாரி பாதுகாப்பு அமைச்சுக்கும்,நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனது கணவரை மூன்று மாதம் விடுவிப்போம் என என்னுடைய கணவரை பிடித்துச் சென்ற சீ.ஐ.டீ யினர் தெரிவித்தார்கள்.தற்போது 3மாதங்கள் கடந்து தற்போது 5மாதங்கள் கடந்துள்ளது.கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உறவினரிடம் கடன்பெற்று சென்று என்னுடைய கணவரை பார்த்து வந்திருக்கின்றேன்.குற்றப்புலனாய்வு திணைக்களம் என்னுடைய கணவரை விடுதலை செய்து எம்முடைய பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளையும்,எதிர்கால குடும்பத்திட்டமிடல்களையும் மேற்கொள்ளுவதற்கு உதவி செய்யவேண்டும்.

எனக்கு இவ்வருடம் க.பொ.சாதாரணம் பரீட்சைக்கு தோற்றவுள்ள மகனும்,10வயது 8வயது 3வயது ஆறுமாதமுடைய கைக்குழந்தை அடங்கலாக 5பிள்ளைகளை வைத்து,அவர்களுக்கு மூன்றுவேளை உணவு வழங்கமுடியாமல் ஒருவேளை உணவு கொடுத்து பராமரித்து வருகின்றேன்.பிள்ளைகள் குழிப்பதற்குகூட சவக்காரம் இல்லாமல் குழித்துவிட்டு செல்லும் நிலையில் உள்ளேன்.காலையில் என்னுடைய பிள்ளைகள் குடிப்பதற்குரிய பால்தேனீருக்கான பால்மாவை வாங்குவதற்கு பணம் இல்லாமல் நான் வேதனையுடனும்,சோகத்துடனும் வாழ்ந்து வருகின்றேன்.நான் வைத்தியசாலையில் இருந்தபோது என்னுடைய கணவரை வவுணதீவு பொலிஸ் கொலையுடன் சந்தேகப்படுத்தி கைது செய்து சென்றுள்ளார்கள்.இதனை நான் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.என்னுடைய கணவர் குற்றம் செய்யவில்லை.அவரை விடுதலை செய்யவும் என கேட்டுக்கொள்கின்றேன்.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அமைச்சினால் 250,000 ரூபா கடன் வழங்கப்பட்டது. என்னுடைய குடும்பத்திற்கும் புனர்வாழ்வு அமைச்சினால் கடன் அடிப்படையில் 250,000 வழங்கப்பட்டது.இந்தக் கடனை மாதாந்தம் 5000 ரூபா படி மீளச்செலுத்த முடியாமல் தவிக்கின்றேன்.இக்கடனை நாங்க பெறுவதற்கு பிணையாளியாக எங்களுக்கு கையொப்பம் இட்ட எனது உறவினரின் கணக்கிலக்கத்தில் உள்ள 20,000 ரூபா வங்கியில் கழித்தெடுக்கப்பட்டுள்ளதாக உறவினர் தெரிவிக்கின்றார்.நாங்கள் கடனாளியாக வாழ்ந்துகொண்டு கஸ்டத்தின் மத்தியில் பொழுதைக் கழிக்கின்றோம். என்னிடம் நான் கடனாக பெற்றவர்கள் வந்து கடனைத் மீளத்தரமுடியுமா...? என்று ஏப்பமிடுகின்றார்கள்.நாங்க சாப்பிடுவதற்கு கடையில் பொருட்களை கடனாக வாங்கித்தான் 5மாதகாலமாக சாப்பிட்டு வந்தோம்.கடைக்காரர்கள் இனியும் கடன் தரமாட்டோம் எனக்கூறுகின்றார்கள்.இதெல்லாம் எனக்கும்,எமது குடும்பாருக்கும் வெட்கமாகவும் வேதனையாகவுள்ளது.தயவுசெய்து மூன்றுவேளை நாங்கள் உழைத்து உணவு உண்பதற்கு என் கணவரை விடுதலை செய்யுங்கள் என கண்ணீருடன் கதறியழுதார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசியல்தலைமைகள் என்னுடைய கணவரின் விடுதலை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியோ அல்லது பாராளுமன்றத்திலோ குரல்கொடுத்தோ தெரிவிக்கவில்லை.எனவே எனது கணவரான கதிர்காமத்தம்பி-இராஜகுமாரன்(அஜந்தன்)சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.எனது கணவரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனமெடுத்து விடுவிக்கப்படவேண்டும்.அவ்வாறு கணவர் அஜந்தன் விடுதலை செய்யப்படாவிட்டால் நானும்,எனது 5பிள்ளைகளும் நஞ்சு குடித்து மரணிப்போம் எனத் தெரிவித்தார்




SHARE

Author: verified_user

0 Comments: