26 Apr 2019

கிழக்கு ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை வேண்டும் - இரா.துரைரெட்ணம்.

SHARE
கிழக்கு மாகாண ஆளுனர் தொடர்பில் எழும் சந்தேகம் தொடர்பில், நீதியான விசாரணை நடாத்தி குற்றவாளி இல்லையென நிருபிக்கும் வரையில் தற்காலிகமாக ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெள்ளிக்கிழமை (26) குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…

குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களையும், ஆதரவளித்தவர்களையும் கைது செய்து, விசாரணை நடத்தி நீதி மன்றத்தினால் உச்சபட்ச தண்டணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த குறிப்பிட்ட மாதங்களுக்கு முதல் இச்சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை, இந்திய அரசினால் உளவுத்தகவல் பரிமாறப்பட்டமை, அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தும் பாதுகாப்புச் சபைக்கு தெரிவிக்கப்படாமை போன்ற விடயங்களில் அரசின் கவனக்குறைவே. இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இவைமட்டுமின்றி கிழக்குமாகாண ஆளுனர்  தற்கொலையாளிக்கு பாராட்டு வழங்குவதும் இணையத்தளங்களில் செய்திகளாக வெளியாகி உள்ளன. நீதியான விசாரணை ஊடாக தண்டணை வழங்க வேண்டும். 

பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மாஅதிபர் கடமைகளை நிறுத்தப் போவதாக அறிவித்த மாண்புமிகு ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுனர் தொடர்பாகவும், கிழக்குமாகாண தமிழ்மக்கள் இணையத்தளங்களில் ஆளுனரும் தற்கொலையாளியும் உள்ள படத்தைப் பார்த்து கொதிப்படைந்த நிலையில், இச்சம்பவங்களுடன் ஆளுனர் சம்மந்தப்பட்டுள்ளாரா? என சந்தேகிக்கும் நிலையில்  நீதியான விசாரணை நடாத்தி குற்றவாளி இல்லையென நிருபிக்கும் வரையில் தற்காலிகமாக ஆளுனரை பதவியிலிருந்து இடைநிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குpப்பிட்டுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: