23 Mar 2019

கடந்த காலங்களில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை நாங்கள் நியாயமானது என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என கிராமிய விவசாய நீர்ப்பாசன இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.

SHARE
கடந்த காலங்களில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை நாங்கள் நியாயமானது என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என கிராமிய விவசாய நீர்ப்பாசன இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் பத்து இலட்சம் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(23) நடைபெற்றது. இதில் காணி உறுப்பத்திரம் வழங்கிவைத்து  பேசுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்… இந்த நாட்டிலே ஜனநாயத்தையும், ஜனநாயமுள்ள அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், சிறுபான்மையின மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முனைப்புடன்  தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றது.

ஐக்கிய தேசியகட்சி அரசாங்கமானது வடகிழக்கிலே காணாமற் ஆக்கப்பட்ட குடும்பத்தினரை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களின் குடும்பத்தின் தேவையறிந்து மாதாமாதம் 6000 ரூபாயை வழங்குவதற்கு வரவு செலவுத்திட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி திட்டம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

கடந்த அரசாங்கம் 3500 ரூபா வழங்கியது. ஆனால் எங்களுடைய ஐக்கிய தேசியகட்சி அரசாங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபா வழங்க தீர்மானித்துள்ளது. புதிதாக நாடளாவியரீதியில் இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 72000 பேரை இணைக்கவுள்ளோம். இதற்கு பிரதமர் பூரண அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த அரசாங்கம் வழங்க முடியாத 106 வீத சம்பள உயர்வை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே வழங்கியுள்ளது. இந்த சம்பள உயர்வை எந்த அரசாங்கமும் இதுவரை செய்யவில்லை. இருதய நோயாளிகளுக்கு சத்திர சிசிச்சை கருவி கொள்வனவுக்கும் மற்றும் பொதுமக்களின் பயன்படுத்தும் 80 மேற்பட்ட மருந்துப் பொருட்களின் விலையை இயன்றளவு குறைத்துள்ளது. கூடுதலாக ஐக்கிய தேசிய முண்ணனி அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்துதான் உழைத்துக் கொண்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை நாங்கள் நியாயமானது என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்ட அரச உயரதிகாரிகள் நியாயபூர்வமாக செயற்படவேண்டும். தமிழ்மக்களின் நலனில் நாங்கள் மிகுந்த அக்கறையுடன் உள்ளோம். பழைய புண்ணை வைத்துக்கொண்டு அரசியல் தலைமைகள் அரசியல் செய்யவேண்டாம்.

சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இதனால் தமிழ்-முஸ்லிம்கள் தங்களின் சமூகம் சார்ந்த அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: