மட்டக்களப்புக்கு எதிர்வரும் சனிக்கிழமை (23) விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இவ் வைபவத்தில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்களையும் சேர்ந்த மக்கள் உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள நிரந்தரக் காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் வகையில் 6109 காணி அனுமதிப்பத்திரங்களும், 1097 காணி உறுதிப்பத்திரங்களும் (அளிப்பு) வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment