19 Feb 2019

முன்னாள் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் கந்தையா தவராஜா சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம்.

SHARE
திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாரப்பற்று பள்ளிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளரான கந்தையா தவராஜா சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம்.
கந்தையா விதாiனார், மேரி கந்தையா ஆசிரியை ஆகியோரின் புதல்வரான  கந்தையா தவராஜா அவரது ஆரம்பக்கல்வியை பள்ளிக்குடியிருப்பு அ.த.க. பாடசாலை, மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், தோப்பூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்றார். உயர்தரத்தினை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் கற்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொருளியல் சிறப்புப்பட்டம் பெற்றார்.

பல்கலைக்கழகக் காலத்தில் தமிழ்ச்சங்கத்தில் அங்கம் வகித்ததுடன், விவாதக்குழுவிலும் கவியரங்க நிகழ்வுகளிலும் சிறப்புக் காட்டி முத்திரை பத்தித்தார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில சட்டமாணிப் பட்டம் பெற்று, இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணிக் கல்வியும் கற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் சட்டத்தரணியாக கடந்த வாரம் சத்தியப்பிரமாணம செய்து கொண்டார்.

இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அலுவலராக பணியில் இணைந்து, மாவட்ட இளைஞர் சேவை அலுவலர், உதவிப்பணிப்பாளர், கிழக்கு, மாகாணப்பணிப்பாளர், வட மாகாணப் பணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பதவிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தொண்டர் சேவை அடிப்படையில் 1987- 1989வரை இந்தோனேசியாவில் பணியாற்றினார்.

கொரிய அரசின் தொழில்நுட்பக் கல்விப் புலமைப்பரிசில் பெற்று 6 மாதங்கள் கொரியா நாட்டில் பயிற்சி பெற்றமையும குறிப்பிடத்தக்கதாகும். 



SHARE

Author: verified_user

0 Comments: