22 Feb 2019

சுமார் 3 தசாப்தகாலமாக நிலவிவரும், மட்டு.மாவட்ட எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசாங்க அதிபரால் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

SHARE
சுமார் 3 தசாப்தகாலமாக நிலவிவரும், மட்டு.மாவட்ட எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசாங்க அதிபரால் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
சுமார் 3 தசாப்தகாலமாக நிலவிலரும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மக்கள் மாவட்ட எல்லையில் முறுகல் நிலையைச் சந்திப்பதென்பதும், முரண்படுவதும், மிகவும் மனவேதனையான விடையமாகும். 

என மடடக்களப்;பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை எல்லைப் பிரச்சனை தொடர்பிலான கூட்டம் ஒன்று வியாழக்கிழமை (21) மண்முனை தென் எருவில் பற்பு பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்…..

கல்முனை மாநகரசபையின் கழிவகற்றும் வாகனங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியகல்லாறு கிராமத்தின் மக்கள் செறிந்து வாழும் பகுதி ஊடாக கழிவுகளைக் கொண்டு செல்கின்றமையால், அப்பகுதியில் புதன் கிழமை முறுகல் நிலமை ஏற்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசாரை நடவடிக்கை எடுக்குமாறு நாம் பிரதேச செயலாளரினூடாக பணிப்புரை விடுத்திருந்தோம், அதுபோல் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இதனை நாம் தெரியப்படுத்தியதற்கிணங்க கல்முனை பிரதேச செயலாளரை அவ்விடத்திற்கு அனுப்புவதாக அவர் தெரிவித்திருந்தார். 

சுமார் 3 தசாப்தகாலமாக நிலவிலரும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மக்கள் மாவட்ட எல்லையில் முறுகல் நிலையைச் சந்திப்பதென்பதும், முரண்படுவதும், மிகவும் மனவேதனையான விடையமாகும். 

மட்டக்களப்பு அம்பாறை எல்லைப் பிரச்சனை தொடர்பில் தீர்க்கமான முடிவெடுப்பதற்கு அடுத்தவாரம் ஒரு தினத்தை ஒதுக்குவதாக அம்பாறை மாவட்ட செயலாளர் எமக்குத் தெரிவித்துள்ளார். அன்றயத்தினம் இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த துறைசார் அதிகாரிகள் அனைவரும் கூடி கலந்துரையாடி, தீர்க்கமான முடிவு எட்டப்படும் என நினைக்கின்றேன். 

மக்களுக்கிடையே ஒரு சுமுகமான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது பொலிஸ் திணைக்களமாகும். பிரதேச செயலகத்தோடு சேர்ந்து பொலிசார்தான் முறுகல் நிலையைச் சீர்படுத்த வேண்டியுள்ளது. அதனை களுவாஞ்சிகுடி, பொலிசாரோ அல்லது கல்முனை பொலிசாரோ யாராயிருப்பினும் அவர்கள் அதனை சரியாக மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிசார் சரியாக நடந்து கொண்டார்களா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்ற நிலமை கிருக்கின்றது. புதன்கிழமை ஏற்பட்ட முறுகல் நிலமை தொடர்பில் பொலிசார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சிரேஸ்ட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நாம் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றோம். எனவே மக்களுக்குகோ, அரச அதிகாரிகளுக்கோ காரசாரமாகப் போசுவதனூடாக ஒரு தீர்வையும் நாம் பெறமுடியாது என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: