6 Jan 2019

மட்டக்களப்பு மாவட்ட தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் கருத்தரங்கு

SHARE
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையும் மட்டக்களப்பு மாவட்ட தனியார் மருந்தக உரிமையாளர் சங்கமும் இணைந்து நடாத்திய, தற்காலத்தில் மருந்தகங்களின் செயற்பாடுகள்” எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனை மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06.01.2019) நடைபெற்றது.
மாவட்ட தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வீ. இரமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கிறேஸி நவரெட்ணராஜா தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி ஆர். நவலோஜிதன், தாய் சேய் நல வைத்திய அதிகாரி எம். அச்சுதன், பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி தர்ஷினி காந்தரூபன், கிழக்குப் பல்கலைக் கழக நுண்ணுயிரியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் வேதகி ரஜிவன்,  மருந்தியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் ரொஷானி பிரகாஷ், சுகாதார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல். புஹாரதீன்,    பிராந்திய உணவு, மருந்துகள் பரிசோதகர்களான ரீ. வரதராஜன், என்.விமலசேகரன், என். தவநேசன், மருந்தக உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் தேசமான்ய  எம். சுதாகரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். ‪‬

இதன்போது மட்டக்களப்பு, வாழைச்சேனை, காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, ஏறாவூர் போன்ற இடங்களிலுள்ள சிறந்த மருந்தக உரிமையாளர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: