31 Jan 2019

பாதிக்கப்பட்ட விவசாயிகளது விபரங்கள் திரட்டப்படுகின்றன- மாவட்ட விவசாயப் பணிப்பாளர்.

SHARE
பாதிக்கப்பட்ட விவசாயிகளது விபரங்கள் திரட்டப்படுகின்றன- மாவட்ட விவசாயப் பணிப்பாளர்.
நட்டஈடு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்நியப் படைப்புழுத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளது விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன், இதுவரை தங்களது விபரங்களைப் பதிவு செய்யாதவர்கள் கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால் புதன்கிழமை (30) தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் பணிப்பிற்கமைய உடனடியாக படைப்புழுத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சோளன் செய்கையாளர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், அது தொடர்பான அதிகாரிகளினால் பரீசிலனைகள் மேற்கொள்ளப்பட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 ஹெக்ரயர் வரையில் செய்கை பண்ணப்பட்டிருந்ததுடன், அதில் 689 ஹெக்ரயர் சோளன் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1500 வரையான விவசாயிகள் நஸ்டத்தினை எதிர் கொண்டுள்ளதாகவும் மாவட்ட  விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால் தெரிவித்தார்.

அத்துடன், மாவட்ட ரீதியாகவும், பிரதேச செயலக ரீதியாகவும், விவசாய போதனாசிரியர் பிரிவுகள் ஊடாகவும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வுகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: