29 Jan 2019

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு 32வது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு

SHARE
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு 32வது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு 
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு 32 வது ஆண்டு நினைவு நாள் மகிழடித்தீவு சந்தியிலுள்ள நினைவுத்தூயில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக  திங்கட்கிழமை (28) அனுஷ்டிக்கப்பட்டது 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சி  செயலாளர் கே.ஜெகநீதன்; பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளர் சிவகுமார் (மோகன்) பாக்கியரர். ஆகியோர் உட்பட படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அப் படுகொலையில் உயிர் தப்பியவர்கள் , பொது மக்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டு இப்படுகொலையில்  நான்கு உறவுகளை இழந்த தாயார் அமரசிங்கம் சதீப்பிள்ளை; பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்மாகி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ஊணர்வு பூர்வமாக இடம்பெற்றது . 

இலங்கையின் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு இயற்கைவளம் நிறைந்த பகுதியாக கொக்கட்டிச்சோலை அமைந்துள்ளது. அத்துடன் பெயர் பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம், மீன்பிடி அத்துடன், இறால் வளர்ப்பு என்பனவாகும்.

இக்கிராமத்தின் மீது 28.01.1987 இல் சிறிலங்கா இராணுவத்தின் பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கொண்டவெட்டுவான், களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கல்லடி ஆகிய இடங்களிலிருந்து கவசவாகனங்களுடன் முன்னேறிய இராணுவத்திற் குண்டுவீச்சு விமானங்களும் உலங்குவானூர்திகளும் மேலதிக உதவித் தாக்குதல்களை வழங்க கொக்கட்டிச்சோலை கிராமத்தினுள் நுழைந்த படையினர் அம்மக்களை மிகமோசமாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததுடன், படுகொலைகளையும் செய்தனர்.

இதில் குறிப்பாக அமெரிக்க நிதி உதவி, கண்காணிப்புடன் மகிழடித்தீவு இறால் பண்ணை இயங்கி வந்தது. இங்கு பெருமளவு ஏழைமக்கள் வேலை செய்து வந்தனர். அங்கு வேலை செய்த நூற்றுமுப்பத்தைந்து பொதுமக்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்து இறால் பண்ணைக்குள்ளேயே போட்டதால் இறால் பண்ணை மனித உடல்களை கொண்ட இரத்தப் பண்ணைகளாக காட்சியழித்தது. அத்துடன் கொக்கட்டிச்சோலை அரிசியாலையில் தஞ்சமடைந்திருந்த இருபத்துநான்கு பேரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 12 வயது நிரம்பிய 7 சிறுவர்களும் உள்ளடங்குவார்கள். இதில் குறிப்பாக பன்னிரண்டு வயது தொடக்கம் நாற்பது வயதிற்குட்பட்ட இருநூறிற்கு மேற்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டு சித்திரவதைகளின் பின் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் பலர் காயப்படுத்தப்பட்டனர்.

மேலும் அம்பிளாந்துறை என்ற கிராமத்தில் நாற்பத்தைந்து பொதுமக்களை கொன்ற இராணுவத்தினர் அவர்களின் உடல்களை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் உட்பட பல தொடர் படுகொலைச் சம்பவங்கள் 28,29,30 .01.1987 ஆகிய மூன்று நாட்களிற்குள்ளும் கொக்கட்டிச்சோலையிலும் அதன் அயல் கிராமங்களிலும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: