28 Dec 2018

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்காக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

SHARE
வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்காக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒருங்கிணைப்பில் கிளிநொச்சி, முல்லைதீவு மக்களுக்கான வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பட்டு அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு கொடுப்பதற்காக சேகரிக்கப்பட்ட பொருட்களை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வெள்ளிக்கிழமை(28) வெபர் விளையாட்டு மைதானத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப்பணி மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு மாநகர சபை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் கடந்த(24) மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டு வியாழக்கிழமை(27)மாலை நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

கன்னங்குடா பொதுமக்கள்,மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு திணைக்களம், கோட்டைமுனை விளையாட்டுக் கழகம், நாம்பிக்கையாளர் சபை தலைவர்கள், உறுப்பினர்கள், வாழைச்சேனை பிரதேச சபை, மட்டக்களப்பு வர்த்தக சங்கம், எழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம், கிரான், ஓட்டமாவடி பிரதேச செயலகங்கள், உட்பட பல நிறுவனங்கள் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை அரசாங்க அதிபர் மா.உதாயகுமாரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்கள்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட அரிசிமூடைகள், தண்ணீர் போத்தல்கள், பால்மா பொருட்கள், குழந்தைகளுக்கான புத்தாடைகள், விஸ்கட் பொருட்கள், பெண்களுக்கான அத்தியாவசிய பொருட்கள், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், சீனி, படுக்கை விரிப்புக்கள், சவக்காரங்கள் போன்றன கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலும், பிரதேச சபைகளிலும் பொது மக்கள், விளையாட்டுக் கழகங்கள்,உள்ளுராட்சி மன்றங்கள், வர்த்தக சங்கள், அரச அரசார்பற்ற நிறுவனங்கள் தாங்கள் சேகரித்த நிவாரணப்பொருட்களை கையளித்திருந்தார்கள்.

இவ்வாறு கையளிக்கும் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரணவணபவன், மாநகரசபை ஆணையாளர் கா.சித்திரவேல், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர், மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் கே.வீ.தங்கவேல், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித், சிவில் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். 







SHARE

Author: verified_user

0 Comments: