5 Dec 2018

தனது சேவைக்காலத்தில் கறைபடியாத கையுடன் தானும் வாழ்ந்து,சமூகமும் சிறப்பாக வாழ்வதற்கு வழிகாட்டியாக இருந்து ஏழைமாணவர்களின் கல்விக்கு உரமூட்டியாக வாழந்த ஒரு மனிதர்

SHARE
தனது சேவைக்காலத்தில் கறைபடியாத கையுடன் தானும் வாழ்ந்து,சமூகமும் சிறப்பாக வாழ்வதற்கு வழிகாட்டியாக இருந்து ஏழைமாணவர்களின் கல்விக்கு உரமூட்டியாக வாழந்த ஒரு மனிதனாக வலயக்கல்வி பணிப்பாளராக பாஸ்கரனை  நான் பாரக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு மட்டக்களப்பு வலயத்தில் உள்ள உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்திருந்த மணி விழா மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் பாடசாலையில் சனிக்கிழமை(1)நடைபெற்றது.

இவ்விழாவில் அதிதியாக கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-குறிப்பாக அரச உத்தியோகத்தருடைய சேவைக்காலத்திலே அவரால் செய்யப்பட்ட சேவைகளை நினைவு கூறக்கூடிய வகையிலே இவ்வாறான மணிவிழாவினை ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பொருத்தமானது என நான் நினைக்கின்றேன். அந்த வகையில் தனது சேவையில் இருந்து ஒய்வுபெற்றிருக்கும் வலயக்கல்வி பணிப்பாளர் பாஸ்கரனுக்கு இவ்வாறான மணிவிழாவினை எடுப்பது பொருத்தமானது என்று நான் நினைக்கின்றேன்.

உண்மையிலையே கல்விக்கும், மொழிக்கும், சமயத்திற்கும், சமூகத்திற்கும், கலைக்கும்,கலாசாரத்திற்குமான தன்னாலான தொண்டுகளையாற்றி இப்பிரதேச மாணவர்களை ஆற்றல் மிக்க மாணவ சமூதாயமாக உருவாக்குவதற்கு தொண்டாற்றிய அன்பும் பண்பும்,ஆற்றலும், ஆளுமையும், கருணையும், கொண்ட ஒரு நல்ல  ஒரு தொண்டனுக்கு இந்த மணி விழாவினை நீங்கள் எடுத்துள்ளீர்கள்.இது போற்றுதற்குரிய விழாவாகும்.

தற்காலத்தினை பொறுத்தமட்டில் வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போதெல்லாம், வசதிகள் கிடைக்கின்ற போதெல்லாம்,தன்னையும் தனது குடும்பத்தினையும் வளப்படுத்திக் கொண்டு சொத்துக்களைக் குவித்து தான்மாத்திரம் அனுபவித்துக் கொண்டு ஒருவரும் அனுபவிக்விடாமல் தடுத்து தான் மட்டும் சுபபோகத்தில் வாழுகின்ற மனிதர்கள் வாழுகின்ற காலத்திலையே, கறைபடியாத கையுடன் தானும் வாழ்ந்தும்,தனது சமூகமும் சிறப்பாக வாழ்வதற்கு வழிகாட்டியாக இருந்து ஏழைமாணவர்களுடைய கல்விக்கு மாத்திரமின்றி சமய சமூதாய சிந்தனைக்கு உருமூட்டியாக வாழந்த ஒரு மனிதனை எவளவுதான் பாராட்டியாலும் போதாதென்றுதான் நான் நினைக்கின்றேன்.

என்னை பொறுத்தளவிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே பலதரப்பட்ட நிகழ்வுகளை, வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போதெல்லாம் பாஸ்கரனின் ஒத்துழைப்பு எங்களுக்கு அதிகமாகவே இருந்தது.எந்த சந்தர்ப்பத்திலேயும் அவரிடம் உதவிகளைக் கோருக்கின்ற போதெல்லாம் அவர் மனங்கோணாது  தன்னாலான வினைத்திறனுடனான பங்களிப்பை எங்களுக்கு அவர் வழங்கிவந்த ஒரு பண்பான உத்தியோகத்தர் ஆவார்.

அவர் தன்னுடைய தொழிலில் பதவிரீதியாக இறங்கிவந்து பலதரப்பட்ட புதிய சிந்தனைகளைப் புகுர்த்தி சிறப்பான முறையில் அவருடைய பணியினை முன்னெடுத்துவந்த ஒரு சிறந்த கல்வி பணிப்பாளர் பாஸ்கரன் ஆவார்.அதுமாத்திரமின்றி பாராம்பரியத்திற்கு முன்னுரிமையளிக்கும் பழமைபற்றாளனாகவும் பாஸ்கரன் காணப்பட்டார்.

உண்மையில் அண்மையில் வெபர் மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டுக்களை நடாத்தியபோது நான் அவரிடத்தில் எவ்வாறான பாரம்பரிய சித்தனைகளை அவருள்வைதிருக்கின்றார் என்ற விடயத்தினை அன்று நான் அறிந்து கொண்டேன்.
இவ்வாறான ஆற்றல் மிக்க உத்தியோகத்தர்கள் பாராட்டப்பட வேண்டியவரே என்பதற்கு மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.இவ்வாறான மனிதன் தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றாலும் அவரும்,அவரது குடும்பமும் ,அவராது வாழ்க்கையும் பன்மடங்கு சிறக்க  வேண்டும் என மனமார வாழ்த்துவதோடு எமது பிரதேசத்திலே இவர்களைப்போன்றவர்களுக்காக பலதரப்பட்ட சமூக சேவைகள் காத்துகிடக்கின்றது என்பனையும் இவ்விடத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: