26 Dec 2018

மனிதர்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள்தான் போரழிவுகளுக்குக் காரணமாய் அமைகின்றன – பிரதேச செயலாளர் சிவப்பிரியா.

SHARE
இயற்கை அனர்த்தங்களுக்கொல்லாம் காரணம் மனிதர்களால் இயற்கைச் சமநிலையைக் குழப்புகின்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள்தான் போரழிவுகளுக்குக் காரணமாய் அமைகின்றன. எனவே நாம் அனைவரும் இயற்கைகையப் பாதுகாக்கின்ற கடப்பாட்டில் இருக்கின்றோம். மரங்களை வளர்ப்பது, காடுகளை அழிக்காது பாதுகாப்பது, உட்கட்டுமானஙகளை இயற்கைக்கு ஏற்ற வகையில் அமைப்பது, பயிர்செய்கைகளை மேற்கொள்வது, போன்றவற்றில் அதிகூடிய அக்கறை செலுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றன.
என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (26) காலை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இயற்கை அனர்த்தங்களால் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படுகின்ற இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவையாகும். இவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டி முற்கூட்டியே அவர்களுக்கான உபாயங்களை வழங்கி பாதுகாப்பு வழங்குவது, பிரதேச செயலகத்தின் ஒவ்வாரு உத்தியோகஸ்த்தர்களதும் சமுதாயம் சார் கடப்பாடாகும். 

பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து உத்தியோகஸ்த்தர்களும், பிரதானமாக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், கிராமங்களிலே ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பது, முகம்கொடுப்பது போன்ற விடையங்களுக்கு மிகவும் காத்திரமானவர்களாக இருக்கின்றார்கள். இவற்றுக்கு மேலாக அனர்த்தம் என்று வரும் போது அனைத்து உத்தியோகஸ்த்தர்களும் ஒன்றிணைந்து பிரதேச மக்களைப் பாதுகாத்து காப்பாற்ற வேண்டியது எமது கடப்பாடாகும். என அவர் இதன்போது தெரிவிததார்.

இந்நிகழ்வின்போது தேசியக் கொடி ஏற்றப்பட்டு, 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தில் உயிர் நீத்த அனைவருக்குமான ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பிரதேச செயலகத்தில் கடமை புரிகின்ற அனைத்து அரச உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.














SHARE

Author: verified_user

0 Comments: