3 Dec 2018

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிப்பது சட்டவிரோதமானது என உத்தரவிட்டு ஸ்ரீலங்காவின் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

SHARE
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிப்பது சட்டவிரோதமானது என உத்தரவிட்டு ஸ்ரீலங்காவின் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் என கூறிக்கொண்ட அமைச்சர்களுக்கும் அந்த பதவிகளில் தொடர்வதற்கும் சட்டத்தில் அனுமதி இல்லை என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிறின்சி பத்மன் சூரசேன, அர்ஜூன் ஒபேசேகர, ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் டிசம்பர் 12 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவையை மேன் முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தாரவிட்டுள்ளது.

ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவை அதிரடியாக பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனைத் தொடர்ந்து அவரது சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் மூத்த உறுப்பினர்களை அமைச்சர்களாகவும் நியமித்திருந்தார்.

இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ளாது அதற்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த பிரதமராகவும், அவரது விசுவாசிகள் அமைச்சர்களாகவும் செயற்படுவதை தடைசெய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை டிசம்பர் 3 ஆம் திகதியான இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளுார் நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிறின்சி பத்மன் சூரசேன, அர்ஜூன் ஒபேசேகர, ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் டிசம்பர் 12 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவையை மேன் முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தாரவிட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகள் டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மீண்டும் இடம்பெறும் என்றும் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்திருக்கின்றது.
ஐக்கிய தேசிய முன்னணி ஜே.வி.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் ஆகிய கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் மஹிந்த ராஜபக்ச உட்பட 49 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.(ibc)

SHARE

Author: verified_user

0 Comments: