2 Dec 2018

வவுணதீவில் இரண்டுபொலீஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள (வீடியோ)

SHARE
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டுபொலீஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள்இயக்கத்தின் முன்னாள் போராளிகள் நான்கு பேரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த மூன்றுமுன்னாள் போராளிகளும், கிளிநொச்சியில் ஒருவருமாக நான்கு முன்னாள்போராளிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு ஐபீ.சீ தமிழுக்குஉறுதிப்படுத்தியது. எனினும் வவுணிதீவு படுகொலையுடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்டுள்ள தேசத்தின் வேர்கள் என்ற அமைப்பின் உறுப்பினர்களான தமக்கும்இந்தப் படுகொலைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற பொலிஸ் நிலையத்திற்குவிசாரணைக்கு செல்வதற்கு முன்னதாக அந்த அமைப்பின் இயக்குணரான முன்னாள் போராளி சமூகவலைத்தளங்களில் பதிவுசெய்திருந்த காணொளியில் மிகத் தெளிவாக கூறிச்சென்றிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

இதேவேளை வவுணதீவு படுகொலை சம்பவத்துடன்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தியுள்ளமையால்தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் பெரும் துயரங்களுக்கு மத்தியில் வாழும் முன்னாள் போராளிகளின்குடும்பத்தினர் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்திருக்கின்றது.
மட்டக்களப்பு நகரிலிருந்து ஆறுகிலோமீற்றர் தொலைவில் உள்ள வவுணதீவு மற்றும் வளையிரவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும்வவுணதீவு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில்ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நவம்பர் 30 ஆம் திகதியான நேற்றையதினம் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் கல்முனைபிரேதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கணேஸ் தினேஸ், காலி உடுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நிரோஷன்இந்திக்க பிரசன்ன ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்களே கொல்லப்பட்டனர். இந்த நிலையில்இந்த படுகொலை தற்போது பெரும் குழப்பத்திற்குள் இருக்கும் கொழும்பு அரசியலிலும் பெரும் பதற்றத்தைதோற்றுவித்திருக்கின்ற நிலையில், பொலிஸ் மா அதிபர் பூஜித்தஜயசுந்தரவின் பேரில் சீ,ஐ.டி யின் பணிப்பாளர் தலைமையில்நியமிக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட புலனாய்வாளர்கள் தொடர்ந்தும்தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மாவீரர் நாள்நினைவேந்தல் செய்வதற்கு பொலிசார் இடையூறு செய்ததற்கு பழிவாங்குவதற்காக இந்த படுகொலைகளைசெய்திருக்கலாம் என்று கொழும்பிலிருந்து இயங்கும் மஹிந்த ராஜபக்சவிற்கு சாதகமான சிங்களஊடகங்கள் நேற்றைய தினமே செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் பொலிஸ்ார் படுகொலைசெய்யப்பட்டதினம் மட்டக்களப்பு வவுணதீவு பகுதிக்கு சென்றிருந்ததாக கூறப்படும கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளியொருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால்கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியைசேர்ந்த 48 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் என்ற இந்தமுன்னாள் போராளி பொலிசாரின் அழைப்பிற்கு அமைய கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திற்குசென்ற நிலையிலே கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் உறுதிப்படுத்தினர்.
குறித்த முன்னாள் போராளியிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்ததன் பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்ததாககிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர். இந்த நிலையில் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்இருவர் படுகொலை தொடர்பில் இன்று மாலையாகும் போது மேலும் மூன்று முன்னாள் போராளிகள்உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசத்தின் வேர்கள் அமைப்பின்கொக்கட்டிச்சோலை பொறுப்பாளர் - நிலவன் எனப்படும் இராசநாயகம் சதீஸ், அந்த அமைப்பின் உறுப்பினரான முன்னாள் போராளி அஜந்தன் மற்றும் முன்னாள் போராளி பாஸ்கரன் ஆகியோரே பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட கணேஸ்தினேஸ் என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரின் காதலியென கருதப்படும் யுவதியும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் போராளி அஜந்தன் நேற்றுகைதுசெய்யப்பட்ட நிலையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன்பிரபாகரனின் வீட்டிற்கு நேற்று இரவு சென்ற பொலிஸார் அவரை விசாரணைக்கு வருமாறுஅழைப்பு விடுத்திருந்தனர. இதற்கமைய தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன்பிரபாகரன் இன்று காலை வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளார்.
விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்குசெலடவதற்கு முன்னதாக தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனரான முன்னாள் போராளி கணேசன்பிரபாகரன் வட்சப்பில் பதிவிட்டிருந்த கானொளியில், வவுணதீவு பொலிஸாரின்படுகொலைக்கும் தமது அமைப்பிற்குமிடையில் எந்தவொரு தொடர்பும் இல்லையென தெரிவித்திருந்தார்.
வவுணதீவ பாலத்திலுள்ள பொலிஸ்சோதனைச்சவாடியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியொகத்தர்கள் இருவரை திடீரென படுகொலைசெய்துள்ள இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதியொன்று இருக்கலாம் என்றும் தேசத்தின்வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
முன்னாள் போராளிகள் மீது திசைதிருப்பப்பட்டுள்ள அரசாங்கத்தின் சந்தேக பார்வை குறித்து சர்வதேச நாடுகள் உடனடியாககவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பொலிசாரின் விசாரணைகளுக்க சென்று இதுவரை வீடுதிரும்பாத முன்னாள் போராளியான தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன்பிரபாகரன் கோரிக்கையும் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.( tx : IBC) 
SHARE

Author: verified_user

0 Comments: