13 Dec 2018

நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது

SHARE
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்துபொதுத்தேர்தலுக்கு செல்லும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்
உட்படுத்திஅதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு சற்று முன்னர்வெளியானது.
பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் குழாம்முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்புவழங்கப்பட்டது.
இதற்கமையஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்சட்டவிரோதமானதெனஉயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பு மாலை 4 மணிக்கு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்த போதிலும்நீதியரசர்கள் உரிய நேரத்துக்கு வருகைத்தராத காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள்பதாதைகள ஏந்தியவாறு நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்புஅறிவிக்கப்பட்டதும் கோஷமிட்டு பெரும் ஆரவாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: