12 Dec 2018

மட்டக்களப்பில் “பேர்கர்” கலாச்சார ஒன்றியத்தின் வருடாந்த ஒளிவிழா.

SHARE
கிறிஸ்து பிறப்பு  விழாவை முன்னிட்டு  மட்டக்களப்பில் “பேர்கர்”  கலாச்சார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம், இவ்வருடத்துக்கான  ஒளி விழா நிகழ்வுகள் மட்டக்களப்பு பேர்கர் ஒன்றியத்தலைவர் டெர்ரென்ஸ் செலெர் தலைமையில் நடைபெற்றன.
சின்ன ஊரணி “லோரன்ஸ் டீ அல்மேடா” சமூக கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விசேட அதிதியாக மட்டக்களப்பு இயேசு சபை பொறுப்பாளர் அருட்தந்தை வின்ஸ்டன் ரோஸெரோ, கௌரவ அதிதியாக மாவட்ட மாநகர சபை உறுப்பினர் பாத்திமா ராகல்  மற்றும் பிரான்ஸ் திருக்குடும்பத்தை சேர்ந்த  கிரிஸ்டலின் ஒக்கர்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த ஒளிவிழாவில் மட்டக்களப்பின் தன்னாமுனை, ஏறாவூர், செங்கலடி, சகாயபுரம்,   கருவேப்பங்கேணி, பனிச்சையடி, தாழங்குடா, காந்திகிராமம், திருப்பெருந்துறை போன்ற மறைமாவட்ட பங்குகளில் உள்ள இளைஞர் யுவதிகளின் கலை கலாச்சார  நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மறைக்கோட்ட அருட் தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பிராந்திய பேர்கர் கலாச்சார ஒன்றியத்தின் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில், அதிதிகளின் உரைகள் நடைபெற்றதுடன், இளைஞர் யுவதிகளுக்கு பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 










SHARE

Author: verified_user

0 Comments: