31 Dec 2018

புதிய ஆண்டில் 600 வீதி விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை – தவிசாளர் யோகநாதன்

SHARE
எதிர்வரும் 2019 ஆம் அண்டில் கற்பிணித்தாய்மார்கள், வலதுகுறைந்தவர்கள், விதவைகள், போன்றோருக்கு சத்துணவுத் திட்டங்களை முன்நெடுக்கவும், மேலும் இப்பிரதேசத்தில் 600 மின் விளக்குகளைப் பொருத்தவும், அதற்கு மேலாக கிரவல் வீதிளும், கொங்றீட் வீதிகளையும், அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். 
பிரதேச சபைக்கு எமது புதிய நிருவாக கட்டமைப்பு வந்து இவ்வருடத்திற்குள் (2018) பல அபிவிருத்தி செயற்றிட்டங்களை மக்கள் மத்தியல் கொண்டு சென்றுள்ளோம் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தெரவித்தார்.

இவ்வருடத்திற்குள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் முன்நெடுக்கப்பட்ட செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளது. என்பது தொடர்பில் திங்கட் கிழமை (31) தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….

நாம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையைப் பெறுப்பேற்று இவ்வருடம் 2018.12.31 ஆம் திகதியுடன் 10 மாதங்களைக் கடந்துள்ளது. இதற்குள் நாம் எம்மாலான பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

எமது பிரதேச சபை அனைத்து உறுப்பினர்களின் ஒத:துழைப்புடனும், பிரதேச சபை நிதியைக் கொண்டு பல அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். மிக நீண்ட காலமாக களுவாஞ்சிகுடி கடற்கரைப் பிரதேசம் பாரிய குப்பை மேடாக காணப்பட்டது அதனை 170000 ரூபா செலவில் தற்போது தூய்மையாக்கப்பட்டு அப்பகுதில் இயற்கைப் பசளை உற்பத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  தலா 20 இலட்சம் ரூபா செலவில் துறைநீலாவணை, மகிழூர், குருமண்வெளி, எருவில்,  தேத்தாத்தீவு, ஆகிய கிராமங்களில் கொங்றீட் வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைவிட பல கிரவல் வீதிகளும் செப்பனிடப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக இருளில் கிடந்த வீதிகளுக்கு ஒளியூட்டியுள்ளோம், களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை புணரமைக்கப்பட்டுள்ளன. 

எதிர்வரும் 2019 ஆம் அண்டில் கற்பிணித்தாய்மார்கள், வலது குறைந்தவர்கள், விதவைகள், போன்றோருக்கு சத்துணவுத் திட்டங்களை முன்னெடுக்கவும், மேலும் இப்பிரதேசத்தில் 600 மின் விளக்குகளைப் பொருத்தவும், அதற்கு மேலாக கிரவல் வீதிளும், கொங்றீட் வீதிகளையும், அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். 

இவற்றுக்கு மேலாக எமது பிரதேச சபையின் மூலம் இப்பிரதேச மக்களுக்க எவ்வாறான உதவிகளையும், வசதிகளையும், ஏற்படுத்திக் கொடுக்க முடியுமோ அதனை எதிர்வரும் ஆண்டில் ஏற்படுத்திக் கொடுக்க தாம் தீர்மாதின்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: