18 Dec 2018

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு -2018

SHARE
மாவட்ட செயலகம், சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் அங்கவீனமுற்றோருகக்கான தேசிய செயலகமும் இணைந்து நடத்தும் 
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு எதிரவரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை  பாலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 
அங்கவீனமுற்ற நபர்களை வலுவூட்டுதல், உள்வாங்குதல் மற்றும் சமத்துவத்தினை உறுதிப்படுத்துதல் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வில் பாடசாலைகளில் திறமைகளைக்காண்பித்த, போட்டிகளில் வெற்றி ஈட்டியவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. 

நிகழ்வில், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய, 2017 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கௌரவிப்படவுள்ளனர். 

அத்துடன், 2016 ஆம் , 2017 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு 25000 ரூபா பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மாவட்ட சமூக சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே நேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள விளையாட்டு விழாவில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு தலா 5000 ரூபா பெயுமதியான பணப்பரிசு, சுயசக்தி அபிமானி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு ரூபா 5000 பெறுமதியான பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது. 

சித்துறு கலைநிகழ்வில் பங்குபற்றிய குழு, பிரதேச மட்டத்தில் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய சுய உதவிக் குழுக்களின் அங்கத்தவர்களும் குறித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் மட்டக்களபபு மாட்ட சமூக சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளமை குறிபபிடத்தக்கதாகும். 

SHARE

Author: verified_user

0 Comments: