12 Nov 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம்,

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார்.

சமீபத்தில் ஏற்பட்ட அடை மழை பெருவெள்ளம் காரணமாக விவசாயிகள் தமது இழப்புக்கள் குறித்த விவரங்களைச் சமர்க்கவேண்டியது பற்றிக் கேட்டபோது அவர் விவரம் தெரிவித்தார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை 12.11.2018 மேலும் தெரிவித்த அவர், சமீப சில நாட்களாக நீடித்த அடைமழையும் பெருவெள்ளமும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கின்றது.
எனவே, விவசாயிகள் தாமதிக்காது தமது இழப்புக்கள் பற்றிய விவரங்களை முறைப்படி சமர்ப்பிக்க வேண்டும்.

இழப்புக்களை ஈடு செய்வதற்கான நிவாரணங்களாக உள்ளீடுகளையோ, விவசாய உபகரணங்களையோ, மானியங்களையோ அல்லது இழப்பீட்டுத் தொகையையோ பெறுவதற்கு விவசாயிகள் தமக்கேற்பட்ட இழப்புக்கள் சம்பந்தமான தகவல்களை துல்லியமாக உறுதிப்படுத்தி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எழுத்து வடிவத்திலே தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை அறிக்கையிட வேண்டும். கிராம சேவையாளரிடத்திலும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யலாம், பின்னர் விவசாயப் போதனாசிரியர்கள் மூலமாக இழப்புக்களை உறுதிப்படுத்தி கமநல சேவை நிலையத்திலும் அறிவிக்கலாம்.

இந்த விவர்களைத் தொகுத்து மாவட்டச் செயலகத்திற்கும் பின்னர் கமத்தொழில் அமைச்சுக்கும் சமர்ப்பிக்க விவசாய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
இப்பொழுது ஏற்பட்ட அசாதாரண காலநிலை போன்றுதான் 2011ஆம் ஆண்டிலே அடைமழையும்  பெருவெள்ளமும் ஏற்பட்டது.

அப்போது விவசாயிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன. அந்த சேத விவரங்களை சரியான முறையில் திரட்டி நாம் அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்திருந்தோம், அதற்கான நிவாரணங்களை விவசாயிகள் உடனடியாகவே எதிர்பாரத்திருந்தார்கள். ஆனால், கால தாமதமானபோதிலும் இழப்பீடுகள் ஏதோ ஒரு வடிவத்தில் விவசாயிகள் திருப்தியடையும் அளவுக்குக் கிடைத்தன.

நீர் இறைக்கும் இயந்திரம், விதை நெல், இழப்பீட்டுத் தொகை இப்படி பல விதத்தில் அந்த இழப்பீடுகள் ஒருவருடத்திற்குப் பிறகு கிடைத்தன.

மட்டக்களப்பு நகர மத்தியில் வைத்தே ஜனாதிபதியினால் இந்நிவாரணங்கள் விவசாயிகளுக்கு பகிரங்கமாக வழங்கப்பட்டன.

அதனால் விவசாயிகள் தமக்கேற்பட்ட இழப்புக்கள் குறித்து சோர்வடையக் கூடாது உடனடியாக அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாராக வேண்டும்.

இழப்பீட்டுக்கான வேண்டுகோள்கள் முறைப்படி அமைந்தால் குளறுபடிகளைத் தவிர்த்துக் கொள்வதற்கும் ஏமாற்றங்களைத் தவிர்ப்பதற்கும் இலகுவாக இருக்கும்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: