30 Nov 2018

திக்கோடை கணேசா வித்தியாலத்தின் மீது காட்டு யானை தாக்குதல்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திக்கோடை கணேச வித்தியாலயத்திற்கு வெள்ளிக்கிழமை (30) அதிகாலை புகுந்த இரண்டு காட்டு யானைகள் பாடசாலையின் சுற்று வேலியை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளதுடன், பாடசாலை வளாகத்திலிருந்த தென்னை மரம் ஒன்றையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பாடசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில்  பழுகாமத்திலிருந்து மேற்படி திக்கோடை கணேச வித்தியாலயத்தில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் வியாழக்கழமை கடமைக்குச் சென்று கொண்டிருக்கும்போது காட்டுக்குள் பதுங்கியிருந்த யானை அபிவிருத்தி உத்தியோகஸ்த்ததை வழிமறித்துத் தாக்கியுள்ளது.

அவ்வேளையில் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட உத்தியோகஸ்த்தர் காட்டு யானை தாக்க முற்படுகையில் தனது மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே கைவிட்டு விட்டு ஓடி உயிர் பிளைத்துள்ளார்.

அதனால் காட்டு யானை மோட்டார் சைக்கிளை இலக்காக்கிக் கொண்டு அதனைத் துவம்சம் செய்துள்ளது. 

இதனிடைய மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியல் தொடர்ச்சியாக காட்ட யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: