13 Nov 2018

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக பரிசளிப்பு விழா

SHARE
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி பிரிவினால் முன்னெடுக்கப்படும் சுகாதாரக் கழகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது சனிக்கிழமை(9.11.2018) காலை 9.00 மணியளவில் வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கணபதிப்பிள்ளை-பாஸ்கரன் தலைமையில் மிகவும் ஆரோக்கியமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பரிபாலனத்தின் கீழுள்ள 64 பாடசாலைகளில் சுகாதார, சுற்றாடல் செயற்பாடுகள் போன்றவற்றை 22விடயங்களில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக மேற்பார்வை குழுவினரால் மதிப்பிடு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும்,பொறுப்பாசிரியருக்கும் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் இதன்போது சான்றிதழ்களும்,நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் க.பாஸ்கரன் அவர்களின் தூரநோக்குச் சிந்தனையின் பிரகாரம் எம் கல்விச்சமூகத்தில் இணைந்திருக்கும் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோகஸ்தர்கள் ஊடாக அவர்களுக்கு தொற்றும் நோய்கள்,தொற்றாநோய்கள் இரண்டும் அணுகாமல், ஆரோக்கியமாக வாழ்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தியும்,அதனைத் தடுப்பதற்கான சுகாதார நற்பழக்கங்களையும்,வழிமுறைகளையும் ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வுகள் வருடாவருடம் திட்டமிட்டு நடாத்தப்படுகின்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் திருமதி. க.கணேசலிங்கம்,விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர்(தமிழ்) த.யுவராஜன்,முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன், கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் இரும்பு சீமாட்டியுமான "அதிபர்திலகம்" திருமதி. திலகவதி ஹரிதாஸ், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ்,ஓய்வுநிலை அதிபர்களான எஸ்.சிவக்கொழுந்து,திருமதி. வீ.உதயகுமார் ஆகியோர்களும், கௌரவ அதிதிகளாக வேல்முருகன் விநியோகஸ்தர் எஸ்.காசிப்பிள்ளை,சிவகெங்கா உரிமையாளர் எஸ்.கெங்காதரன்,சன்பென்சி உரிமையாளர் எஸ்.சிவபாதசுந்தரம்,வேல்முருகன் உரிமையாளர் எஸ்.செல்வராஜா மற்றும் பிரதிக்கல்வி பணிப்பாளர்(நிருவாகம்) திருமதி.சுஜாதா குலேந்திரகுமார்,பிரதிக்கல்வி பணிப்பாளர்(திட்டமிடல்) எம்.எச்.எம்.ஹைதர்லி,உதவிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி. ரீ.உதயாகரன்,வை.சீ.சஜீவன்,கே.பிரபாகரன்,ஆர்.பாஸ்கரன்,கோட்டக்கல்வி பணிப்பாளர் க.அருட்பிரகாசம்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இராசதுரை பாஸ்கர் உட்பட ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் இதன்போது கலந்து கொண்டார்கள்.

இதன்போது 25 பாடசாலைகள் தங்க விருதினையும்,21 பாடசாலைகள் வெள்ளி விருதினையும்,15 பாடசாலைகள் வெண்கலம் விருதினையும் சுவீகரித்துக் கொண்டார்கள். இதன்போது மாணவர்களின் சுற்றாடல் ரீதியான செயற்பாடுகள்,தற்காப்புக் கலை,உடற்பயிற்சி, யோகாசனம்,ஜிம்னாஸ்டிக்,இசையும் அசைவும் இடம்பெற்று சபையோரினால் பாராட்டைப் பெற்றுக்கொண்டார்கள்.இவ்வாறான சுற்றாடல்,சுகாதார ரீதியான செயற்பாடுகளை பாடசாலைக்கும்,மாணவர்களுக்கும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தியும், விளைதிறனுடன் உழைத்த வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார்,ஆசிரிய ஆலோசகர்களான கே.ரவீந்திரன்,ஜீ.கிருஸ்ணமூர்த்தி,கே.சிவராசா,திருமதி. ஐ.அருளம்பலம் ஆகியோர்கள் அதிதிகளினால் சிறப்பான பாராட்டுக்களை தனதாக்கிக் கொண்டார்கள்.








SHARE

Author: verified_user

0 Comments: