15 Oct 2018

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் திருவுருவச் சிலை எழுச்சியாக மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

SHARE
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் திருவுருவச் சிலை எழுச்சியாக மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பேரூந்து நிலையச் சந்தியில், வாவிக்கரை வீதியில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலை, திங்கட்கிழமை (15)பிற்பகல் 3.40 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. 

தந்தை செல்வநாயகத்தின் சிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான, இரா. சம்பந்தன் திரைநீக்கி திறந்து வைத்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவினால் சிலைக்கு மாலை அணிவித்து வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, த.கனகசபை, தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், முன்னாள் மாகாண சபை  உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: