3 Jan 2017

சொர்ண பூமி உறுதிப் பத்திரக் காணிகளை மீண்டும் ஒப்படைக்க பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர்

SHARE
மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயரச்
செய்யப்பட்ட சொர்ணபூமி உறுதிப் பத்திரம் உள்ள 25 முஸ்லிம் விவசாயிகளின் காணிகளை ஒப்படைப்பதற்கு ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

இது விடயமாக செவ்வாய்க்கிழமை (03.01.2017) கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது@

பதுளை வீதியை அண்டியுள்ள பல கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்து பயிர்ச் செய்கையிலும், நெற் செய்கையிலும் ஈடுபட்டு வந்த முஸ்லிம் விவசாயிகளின் காணிகள் மீள ஒப்படைக்கப்படாமல் இருந்து வந்தது.

இவ்விதம் சுமார் 1500 ஏக்கர் காணிகள் தற்சமயம் மேய்ச்சல் தரை என்ற பெயரில் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் பயனாக சொர்ணபூமி உறுதிப் பத்திரங்களைக் கொண்டுள்ள காணியை இழந்த முஸ்லிம் விவசாயிகளின் காணிகளை மீளக் கையளிப்பதற்கு பிரதேச செயலாளர் முன்வந்திருப்பது கடந்த 30 வருடங்களாக காணியையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் ஏழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

இதுபோல் ஏறாவூர்ப் பற்றில் பதுளை வீதியை அண்டியுள்ள பகுதிகளில் காணியை இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து கண்ணீர் சிந்தும் ஏழை விவசாயிகளின் மிகுதியுள்ள காணிகளையும் விடுவிப்பதற்கு nதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் சுபைர் வேண்டுகோள் விடுத்தார்.
காணிகளை இழந்த விவசாயிகளிடத்தில் காணி உரித்துக்காக நாட்டின் ஜனாதிபதி அவர்களால் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட சொர்ணபூமி உறுதிப் பத்திரங்கள், காணி ஒப்பம், வருடாவருடம் புதுப்பிக்கின்ற மற்றும் வரி செலுத்துகின்ற ஆவணங்கள் ஆகியவையே விவசாயிகளின் கைகளில் உள்ளதாகவும் சுபைர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: