14 Oct 2016

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய மட்/பட்/ பெரியகல்லாறு மெ.மி.த.பெண்கள் பாடசாலை

SHARE
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற  5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்  மட்/ பட்/ பெரியகல்லாறு மெ.மி.த பெண்கள் பாடசாதலையில் 06 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். இதற்காக   முன்னின்று உழைத்த பாடசாலையின் அதிபர்  மு. சந்திரசேகரம், மற்றும் கற்பித்த ஆசிரியர் நா. மகேஸ்வரன் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.


அருள்கிருஸ்ரியன் அன்ட்ரோலினா – 153 புள்ளிகள்
குணதாசன் மாதுரிக்கா – 159 புள்ளிகள்
சுவானந்தா அர்ச்சனா – 163 புள்ளிகள்
பிறின்ஸ் மணிவாசன் லதுஷன் - 173 புள்ளிகள்
ஜெயக்குமார் துகாசன் - 151 புள்ளிகள்
தினகரன் சஸ்கிதன் - 160 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப் பாடசாலையில் 100 புள்ளிகளுக்கு மேல் 95வீதமான மாணவர்கள் பெற்றுக் கொண்டமை  சிறப்புக்குரியதாகும்.

மேலும் இப் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் நந்தகுமார் மதுரிக்கா  அவர்கள் Copy Writing  போட்டியில் மாகாண  மட்டத்தில் 2ம் இடத்தை பெற்றதுடன் தற்போது தேசிய  மட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக  அம் மாணவியை  பயிற்றுவித்த  எஸ். ஆசைத்தம்பி அவர்கள் பாராட்டுக்குரியவர். 

மேலும் இப்பாடசாலையின் ஆசிரியர் திருமதி. அனுஷா டீ.கொஸ்ரா அவர்கள்  ஆசிரிய  பணியை  தனது மேலான  கடமையாக , அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காக கௌரவ  ஜனாதிபதி 'குரு பிரதீபா விருது' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலம் இப் பாடசாலை எதிர்வரும் காலங்களில் சிறப்பான முன்னேற்றப்பாதையில் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதற்கான  காரணம் பாடசாலை அதிபரின் சிறப்பான வழிநடத்தலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனான  சேவையுமே ஆகும். 




SHARE

Author: verified_user

0 Comments: