5 Aug 2016

கிழக்கு மாகாணத்தில் சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் வைத்தியசாலைகள் சில தரம்முயர்த்தப்பட்டுள்ளது

SHARE
கிழக்கு மாகாணத்தில் சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் வைத்தியசாலைகள் சில தரம்முயர்த்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (04) கொழும்பு நாரேன்பிட்டி இரத்த வங்கி மாநாட்டு மண்டபத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இடம்பெற்ற மாகாண சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சகல வைத்தியசாலைகளுக்கும் அனைத்து வசதிகளும் சரியான முறையில் வழங்க வேண்டும் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லாத நிலமைகளை உடனடியாகத்தீர்கவேண்டும் என்ற இன்னும்பல  கோரிக்கைகளுடன் சில வைத்தியசாலைகளும் தரமுயர்த்த அனுமதியும் பெற்றுக்கொண்டார்.

அந்த வகையில்:
ஆதார வைத்தியசாலைகளாக விருக்கும் இருக்கும்
அம்பாரைப் பிராந்திய தெகியத்தக் கண்டி வைத்தியசாலை,
கல்முனைப் பிராந்திய சம்மாந்துரை வைத்தியசாலை,
மட்டக்களப்புப் பிராந்திய வாழைச்சேனை வைத்தியசாலை,
திருகோணமலைப் பிராந்திய மூதூர் வைத்தியசாலை ஆகியவை
 ‘தரத்துக்கு தரமுயர்த்தப் பட்டுள்ளதுடன்,

ஆரம்பப் பிரிவு வைத்தியசாலைகளாக இருக்கும் சம்மாந்துறை மல்வத்த பிஎம்சி வான் எல பிஎம்சியு ஆகிய  வைத்தியசாலைகளை பிரதேசசிதரமாகவும், பிரதேசசிதர வைத்தியசாலைகளாகவிருக்கும் பதவிசிரிபுர மற்றும் கோமரங்கடவல வைத்தியசாலைகளை மாவட்டபிதரமாகவும்,

பிதரத்தில் இருக்கும் திருகோவில் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகவும், ’சிதரத்தில் இருக்கும் மகிழடித்தீவு  வைத்தியசாலையைதரத்திற்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: