சிரேஸ்ர சட்டத்தரணி த.சிவநாதனின் நுட்பமான எதிர் வாதங்களினால் கைக்குண்டு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட
நபர் மேல் நீதிமன்றினால் விடுதலை.
மட்டக்களப்பு பழுகாமத்தினைச் சேர்ந்த வல்லிபுரம் சோமுவேல் (30) என்பவர் கடந்த 2008.07.02 அன்று களுவாஞ்சிகுடி ஆஸ்பத்திரி வீதியில் வைத்து கைக்குண்டு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பின்பு இவருக்கெதிராக 2012.09.19 இல் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபர் (எதிராளி) சார்பாக சிரேஸ்ர சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் ஆஜராகி குற்றம்சாட்டப்பட்ட நபரின் விடுதலைக்காக மிகவும் நுட்பமான முறையில் எதிர் வாதிட்டு வந்த நிலையில் புதன்கிழமை (09) குறித்த வழக்கு தீர்ப்புக்காக எடுக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி குற்றம் சாட்டப்பட்ட நபரை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
0 Comments:
Post a Comment