25 Aug 2016

மட்டக்களப்பில் இதுவரை நல்லிணக்கப் பொறிமுறைக்கு 1155 பேர் ஆலோசனைகள் முன்வைப்பு

SHARE
பொதுமக்களிடமிருந்து கருத்துக்களைப் பெறும் நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியினரிடம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இதுவரை 1155
பேர் தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்துள்ளதாக  அச்செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட குழுச் செயலாளர் ஏ. காண்டீபன் தெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 09 ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை வாழைச்சேனை,  களுவாஞ்சிகுடி. மட்டக்களப்பு, வாகரை, பட்டிப்பளை மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேச செயலகங்களில் இடம்பெற்றன.

இதில் 09.08.2016 அன்று வாழைச்சேனையில் 278 பேரும் 12.08.2016 அன்று களுவாஞ்சிக்குடியில் 77 பேரும் 13.08.2016 அன்று மட்டக்களப்பில் 209 பேரும், 16.08.2016 அன்று வாகரையில் 90 பேரும், 18.08.2016 அன்று பட்டிப்பளையில் 235 பேரும், 24.08.2016 ஏறாவூரில் 366 பேருமாக இதுவரை மொத்தம் 1155 பேர் தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர்.

இந்த ஆலோசனைகளிலும் கருத்துக்களிலும் அதிகமானவை காணாமல் போனோர் சம்பந்தப்பட்ட விடயங்களாகவும், அடுத்தபடியாக  காணிகள் சம்பந்தப்பட்டதாகவும், மூன்றாவது அதிகப்படியான கருத்துக்களாக இனப்படுகொலை பற்றிய விவகாரங்களாகவும் இருந்ததாக காண்டீபன் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: